மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago
ஆமதாபாத், குஜராத்தில் தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவைசிகிச்சை மேற்கொண்ட 17 பேருக்கு பார்வை பறிபோன சம்பவம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறைக்கு விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வேதனை
இங்கு, ஆமதாபாத் மாவட்டத்தின் மண்டல் கிராமத்தில், ராமானந்த் கண் மருத்துவமனை சார்பில், கடந்த 10ம் தேதி அப்பகுதி மக்களுக்கு கண்புரை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.ஓரிரு நாட்களுக்குப்பின், சிலருக்கு பார்வை முழுதும் பறிபோனதாகவும், ஒரு சிலருக்கு பார்வை திறன் பாதியாக குறைந்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்படி, இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஒன்பது பேர் கொண்ட குழுவை மாநில சுகாதாரத்துறை நியமித்தது.இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கண் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், குஜராத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கண்புரை அறுவைசிகிச்சை மேற்கொண்ட வயதானவர்கள் ஏராளமானோர் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை தருகிறது. நிவாரணம்
சிகிச்சையின்போது அளிக்கப்பட்ட மருந்துகளின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதேபோல், மருத்துவ நெறிமுறைகளுக்கு உட்பட்டு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, இவ்விவகாரத்தில் இதுவரை சட்டரீதியில் எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை. எனவே, போலீசார், தங்களின் பொறுப்பை உணர்ந்து இந்த வழக்கில் தவறு இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பார்வை பறிபோன நபர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாநில சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், இதுதொடர்பாக வழக்கு விசாரணையை வரும் பிப்., 7ம் தேதியன்று தலைமை நீதிபதி அமர்வுக்கு ஒத்திவைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago