உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு: பரூக் அப்துல்லா இன்று ஆஜராக சம்மன்

கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு: பரூக் அப்துல்லா இன்று ஆஜராக சம்மன்

புதுடில்லி: கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு-காஷ்மீரில் பிரதான கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா, இவர் கடந்த 2002- 2011 ம் ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் நடந்துள்ள ரூ.பல கோடி பணமோசடிதொடர்பாக பரூக் அப்துல்லாவிற்கு கடந்தாண்டு மே மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ.,எம்.பி.க்களை விசாரிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.இந்நிலையில் இந்த வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பி இன்று (ஜன.11) ஆஜராகுமாறு பரூக் அப்துல்லாவிற்கு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜன 11, 2024 00:34

அரசியல்வாதிகள் மீது போடப்படும் வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, அவர்கள் தவறு செய்திருக்கும் பட்சத்தில், அவர்களை காலம் தாமதிக்காமல் உடனே சிறையில் அடைக்கவேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ