உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் சூதாட்டம்: ம.பி.,யில் ரூ.15 கோடி பறிமுதல்

கிரிக்கெட் சூதாட்டம்: ம.பி.,யில் ரூ.15 கோடி பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உஜ்ஜயினி: ம.பி.,யில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிவைத்து உஜ்ஜயினி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் படி 2 வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர். இந்த சோதனையின் போது ரூ.14.60 கோடி ரொக்கம், 7 கிலோ வெள்ளி, 7 நாடுகளின் கரன்சிகள், 10 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி பியூஷ் சோப்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rama adhavan
ஜூன் 14, 2024 18:48

அடிக்கடி நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் உண்மையில் சூதாட்டத்தை தான் வளர்க்கின்றன. கிரிக்கெட்டை அல்ல.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி