உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம்; விளையாட்டு வீரர்கள் ஷாக்

காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம்; விளையாட்டு வீரர்கள் ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் 2026ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கப்பட்டதால், விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.வரும் 2026ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி, ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில், 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டெபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பாட்மின்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா அதிகம் பதக்கம் பெறும், விளையாட்டு நீக்கத்தால், விளையாட்டு ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியாவுக்கு பாதிப்பு ஏன்?

* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருந்து வருகிறது. * கடந்த கால காமன்வெல்த் போட்டிகளில், இந்தியா அதிக பதக்கங்களை வென்ற போட்டிகளை காமன்வெல்த் சம்மேளனம் தற்போது நீக்கி உள்ளது.* அதிக பதக்கங்களுடன் மல்யுத்தம், துப்பாக்கிச்சூடுதல் போட்டிகளை இந்தியா தனது கோட்டையாக வைத்துள்ளது. * மல்யுத்தம், துப்பாக்கிச்சூடுதல் போட்டிகள் நீக்கப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 22, 2024 19:28

இது இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவாக தோன்றுகிறது. இந்தியா வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்க கூடாது. பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்.


sundarsvpr
அக் 22, 2024 13:35

காமன்வெல்த் போட்டி என்றால் இந்தியா இங்கிலாந்திடம் இந்தியா அடிமையாக இருந்ததை நினைவுபடுத்தும். எனவே இந்தியா கலந்து கொள்வது வேதனைக்குரியது. இதனை சுட்டிக்காட்டி விலக வேண்டும். இதனை வைத்து இதர அடிமையாய் இருந்த நாடுகளும் விலகும்.


Nandakumar Naidu.
அக் 22, 2024 12:48

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியா காமன் வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்று நிராகரிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை