உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்; அமெரிக்க நிறுவனங்கள் வழங்கியது அம்பலம்

இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்; அமெரிக்க நிறுவனங்கள் வழங்கியது அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : இந்தியாவில் ஒப்பந்தங்கள் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் சிக்கியுள்ளன. இந்த வழக்குகளில் தண்டனையில் இருந்து தப்பிக்க, இந்த நிறுவனங்கள், 1,700 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் உள்ள சட்டங்களின்படி, அங்குள்ள நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது பெரிய குற்றமாகும். இவ்வாறு லஞ்சம் கொடுத்ததை மறைப்பது, அந்த நாட்டின் பங்குச் சந்தை சட்டத்தின்படி குற்றம். இதற்காக அந்த நாட்டின் நீதித்துறையும், பங்குச் சந்தை கமிஷனும் வழக்குகள் தொடர முடியும்.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, 'த டெய்லி பயனிர்' என்ற பத்திரிகையில், ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்காவைச் சேர்ந்த, 'மூக் இன்கார்ப்பரேஷன், ஆரக்கிள், அல்பமார்லே கார்ப்பரேஷன்' ஆகிய மூன்று நிறுவனங்கள், இந்தியாவில் பல ஒப்பந்தங்களை பெற்றுள்ளன.இந்த ஒப்பந்தங்கள் பெறுவதற்காக, இந்தியன் ரயில்வே, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு இந்த நிறுவனங்கள், பல கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்துள்ளன.இது தொடர்பாக, அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன் வழக்குகள் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் தண்டனை பெறுவதில் இருந்து தப்பிக்க, இந்த மூன்று நிறுவனங்களும், 1,700 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தியுள்ளன.தாங்கள் அளித்த லஞ்சத்தைவிட, மூன்று மடங்கு அளவுக்கு அபராதமாக இந்த நிறுவனங்கள் செலுத்தியுள்ளன.மூன்றில் இரண்டு வழக்குகளில், ரயில்வே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது.இந்தியாவைத் தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, இந்தோனேஷியா, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இந்த நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

K V Ramadoss
டிச 18, 2024 01:13

இதே குற்றத்திற்கு அதாநிக்கு க்கு கைது வாரண்ட் பிறப்பித்த அமெரிக்க நீதிமன்றம் ஏன் இவர்களை கைது செய்யவில்லை ?


sankaranarayanan
டிச 17, 2024 12:58

இந்த லிஸ்டில் எங்களது மாப்பிளையின் பெயர் இருக்கா என்று யாராவது தயவுசெய்து கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன் அப்போதான் எங்களுக்கு நிம்மதி கிடைக்கும்


Neelachandran
டிச 17, 2024 12:37

மூன்று மத்திய அரசுத்துறை அதிகாரிகள் யார் என அரசு விசாரணை நடத்துமா? லஞ்சத்தொகை அதிகாரிகளோடு நின்றதா? மக்களே உங்களது சொத்து எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப் படுகிறது. சிந்திப்பீர்.


R SRINIVASAN
டிச 17, 2024 11:21

அப்பாவி -கர்நாடகாவில் பெலகாவி என்ற இடத்தில கோவில்களை இடித்து மசூதிகளை கட்டுவதற்கு Rs. 150 கோடி கேட்ட தாக பிஜேபியை சேர்ந்த விஜயேந்திராவின் மீது பழி போட்டார்கள் காங்கிரஸ்காரர்கள் .ஆனால் மைனாரிட்டி கமிஷன் தலைவர் அன்வெர் மணிப்படி அவ்வாறு கேட்டது காங்கிரெஸ்க்காரர்கள்தான் என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். அந்த அறிக்கையை கர்நாடக அரசு சட்ட சபையில் தாக்கல் செய்ய மறுக்கிறது என்ற செய்தியை படித்தேன். காமராஜர் நிஜலிங்கப்பா போன்றவர்கள் இருந்த கட்சியில் இன்று தகுதியில்லாத நேரு குடும்பம் இருப்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2024 09:32

எட்டப்பர்கள் வாழ்ந்த நாடு .....


Barakat Ali
டிச 17, 2024 09:19

பொதுத்துறை நிறுவனத்தில் நிர்வாகப்பணி கிடைத்துவிட்டால் அது தங்கச்சுரங்கம் ....... மிஸ்டர் க்ளீன் மோடி சார் ...... என்ன இதெல்லாம் ????


Balasri Bavithra
டிச 17, 2024 10:30

செந்தில் பாலாஜி இப்ப மினிஸ்டர் ஜி


Barakat Ali
டிச 17, 2024 09:14

ராகுல் அதானியை விட்டுவிட்டு மக்களவையில் இதைப்பற்றி கேள்வி எழுப்புவாரா ????


A P
டிச 17, 2024 09:02

தாய் நாட்டின் மேல் பற்று இல்லையென்றால், இது போன்றோர் மூதாதையர்கள் போன மாதிரி பாகிஸ்தானுக்கு ஓடி வேண்டியது தானே. சொந்த நாட்டுப் பற்று இல்லாதவரெல்லாம் இந்த புனித மண்ணின் இருப்பதை விடகேவலமான செயல் எது என்று தெரியவில்லை.


Duruvesan
டிச 17, 2024 08:55

போதித்து இரு, அமெரிக்கால டபுள் பைன் கட்டிட்டானுங்க கேஸ் கிளோஸ்


அப்பாவி
டிச 17, 2024 08:33

2007-2008 ல குடுக்கபட்ட லஞ்சம்னு அடிச்சு உடக்கூடாது. அக்காலத்தில் அரசியல்வாதிகளே நேரடியாக ஆட்டையப் போட்டாங்க. அதுக்கப்பறம் திருவாளர் ஆட்சி வந்து கார்ப்பரேட்கள் மூலம் ஆட்டையப் போடுறாங்க. ஊழல் ஒழியலை கோவாலு. மடை மாறியிருக்கு. அம்பூட்டுதேன்.


Sridhar
டிச 17, 2024 12:59

அமோண்ட பாத்தா அரசியல்வாதிங்க வாங்குற தொகை மாதிரி இல்லையே?? திருட்டு கும்பலுக்கு ஏதேனும் ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைச்சாலும் எல்லோரும் அவுங்க மாதிரிதான்னு சொல்றதுல ஒரு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்யும். அதுக்கு வேண்டி ஊழல்லயே புரையோடி போயி நிக்குற இந்த நாட்டுல ரொம்ப கஷ்டப்பட்டு அத கொஞ்சமாவது குறைக்கறதுக்கு பாடுபடற ஒரு தலைமை / கட்சிமீது சேற்றை வாரி இறைக்க கடைந்தெடுத்த ஒரு அயோக்கியபயலால் தான் முடியும்.


சமீபத்திய செய்தி