உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்.,கில் கச்சா எண்ணெயா? சசி தரூர் ஆச்சரியம்!

பாக்.,கில் கச்சா எண்ணெயா? சசி தரூர் ஆச்சரியம்!

புதுடில்லி,: ர ஷ்யாவிடம் எண்ணெ ய் வாங்குவதால் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியும், அபராதமும் விதித்தார். மேலும், இந்தியா - ரஷ்யா பொருளாதாரம் செத்து போய்விட்டதாகக் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'டிரம்ப் சரியாகவே சொல்கிறார். பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர அனைவருக்கும் இது தெரிந்துள்ளது' என, ஒத்து ஊதினார். இது குறித்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூரிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பிய போது, ''அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. அது நம் அனைவருக்கும் தெரியும். பாகிஸ்தானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்நாட்டில் எண்ணெய் எங்கு உள்ளது என்பது தான் தெரியவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி