உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில் இடம்பிடித்த கிரிப்டோ கரன்சி, துப்பாக்கிகள்

மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில் இடம்பிடித்த கிரிப்டோ கரன்சி, துப்பாக்கிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 2024 - 25ம் நிதியாண்டிற்கான மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில், கிரிப்டோகரன்சி முதலீடு, 20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள், துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் 2024 - 25ம் நிதியாண்டிற்கான சொத்து விபரங்கள், பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம்: மத்திய திறன் மேம்பாட்டு துறை இணையமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி, கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 21.31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோ முதலீடுகளை வைத்துள்ளார். அவர் மனைவி சாரு சிங், 22.41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் சொத்துகளை வைத்துள்ளார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், 37 ஆண்டுகள் பழமையான ஸ்கூட்டர் மற்றும் ஒரு ரிவால்வரை வைத்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், இரு சக்கர வாகனம் மற்றும் 19 லட்சத்துக்கும் அதிகமான 'மியூச்சுவல் பண்ட்' முதலீடுகளை வைத்துள்ளார். மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், 1.2 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள 1,679 கிராம் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சொந்தகாரராக உள்ளார். போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியின் சொத்துக்களில் 31 ஆண்டுகள் பழமையான ஒரு அம்பாசிடர் கார் உள்ளிட்ட மூன்று கார்கள் அடங்கும். அதுமட்டுமின்றி, 37 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளையும் அவர் அறிவித்துள்ளார். அவரது மனைவி காஞ்சன் நிதின் கட்கரி 28 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை வைத்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, ஒரு ரிவால்வர், ஒரு ரைபிள், ஒரு டிராக்டர் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகள் உட்பட கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அறிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூர், இரட்டைக் குழல் துப்பாக்கி, ஒரு ரிவால்வர் மற்றும் 67 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பதாக அறிவித்துள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், 74 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட சொத்துக்களை வைத்துள்ளார். ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, 1997ம் ஆண்டு மாடல் 'மாருதி எஸ்டீம்' கார் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியை வைத்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mohan Mg
செப் 11, 2025 12:06

நல்லா பருங்க சார் இவை அசையும் சொத்து பட்டியல்


M Ramachandran
செப் 11, 2025 11:57

விடியல் அரசு அமைச்சர்கள் நகைய்கிறார்கள். ஒன்றிய அமைச்சர்கள் இந்த சொத்தெல்லாம் சொத்தா. எங்கள் அடிமட்ட தொண்டனுக்கு இதைய விட பல் மடங்கு சொத்தெல்லாம் அதிகம் தேரும் .


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 11, 2025 09:13

உண்மை தகவல் அல்ல. உதாரணமாக நிதின் கட்கரி 2019 தேர்தலின் போதே 18 கோடிகளுக்கும் மேல் சொத்து இருப்பதாக அறிவித்திருந்தார். அதன் இன்றைய மதிப்பே சுமார் 30 கோடிகள்


sankar
செப் 11, 2025 09:51

அவரு செலவழிச்சிருந்தா இல்லை அவருடைய முதலீடுகள் நஷ்டமடைந்திருந்தால்


Saai Sundharamurthy AVK
செப் 11, 2025 08:45

அதாவது பரவாயில்லை. ஏதோ சுண்டைக்காய் தான். ஆனால், இங்கு தமிழ்நாட்டில் பி.டி.ஆர். சொன்னதைப் போன்று 50,000 கோடி, 30,000 கோடி என்று திராவிட குடும்பங்களின் சொத்து விபரங்களைக் கேட்டால் மயக்கம் வந்து விடும். இப்போது திராவிட தலைவரின் பல கோடி ஊழல் முதலீடுகள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் போனவாரம் தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 11, 2025 08:10

அறிவித்தது கைமண் அளவு, அடிச்சு பிடுங்கி அமுக்கியது உலகளவு


V Venkatachalam
செப் 11, 2025 09:03

சாராய யாவாரி மற்றும் குடும்பத்தினரை இந்த அளவுக்கு போட்டு தாக்க கூடாது. ஸேம் சைடு கோல்..


VENKATASUBRAMANIAN
செப் 11, 2025 07:59

இங்கே கவுன்சிலருக்கே இதைவிட பல மடங்கு சொத்து உள்ளது. இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். திராவிட மாடல் குடும்பம் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளது.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 11, 2025 07:54

கனி, ராசா, சிதம்பரம், ஜெகத்து, துரை, மாறன் இவங்கள உட்டுட்டியே


pakalavan
செப் 11, 2025 06:21

மோடி மற்றும் சில மத்திய அமைச்சர்கள் குறித்து இந்த அறிக்கை நம்பகூடியதே ஆனால் அதானி அம்பானிக்கு வங்கி மூலமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலமாகவும், அஜீத் பவார், அதிமுக, தாக்ரே, நாய்டு, எடியூரப்பா போன்றோரிடம் இருந்து ஈடி மற்றும் வருமான வரி அதிகாரி மூலம் சுரன்டியதை


V Venkatachalam
செப் 11, 2025 09:06

இருட்டில் கண் தெரியாததும்பாங்க. பகலிலேயே கண் தெரியலைங்குறது வருத்தமாக இருக்கு. பாவம்.


ஆரூர் ரங்
செப் 11, 2025 11:01

மன்மோகன் பதவியிழந்த போது 74 அரசுத்துறை நிறுவனங்கள் மூழ்கும் நிலையில் விட்டுச் சென்றார். விற்றால் கூட வாங்க ஆள் வரவில்லை. அப்போது அரசே தொழில் வணிகம் செய்யக் கூடாது என்று பசி கூறினாரே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை