ஹரியனாவில் டி.ஏ., உயர்வு
சண்டிகர்: ஹரியானா மாநில தலைமைச் செயலர் அனுராக் ரஸ்தோகிவெளியிட்ட அறிவிப்பு: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி அக்டோபர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் கிடைக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகை நவம்பரில் வழங்கப்படும்.