உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பான் மசாலா நிறுவன உரிமையாளரின் மருமகள் தற்கொலை

பான் மசாலா நிறுவன உரிமையாளரின் மருமகள் தற்கொலை

புதுடில்லி: பிரபல பான் மசாலா நிறுவனங்களை நடத்தி வரும் கமல் கிஷோரின் மருமகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காம்லா பாசந்த் மற்றும் ராஜ்ஸ்ரீ பிராண்ட் போன்ற பான் மசாலா நிறுவனங்களை நடத்தி வருபவர் கமல் கிஷோர் சவுராசியா. இவரது மகன் அர்பித். இவருக்கும் தீப்தி(40) என்பவருக்கும் 2010ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று ( நவ.,25) தீப்தி, டில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீப்தி தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதி வைத்த குறிப்பு ஒன்றை போலீசார் கைப்ற்றினர். அதில் கூறியுள்ளதாவது: உறவில் அன்பு மற்றும் நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்ந்து என்ன பயன். யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.குடும்ப பிரச்னை காரணமாக தீப்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் இறந்த தீப்தியின் உறவினர்கள், கணவரின் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ