கேரள துணை நடிகர் மரணம்
மூணாறு:கேரள மாநிலம், மூணாறு, இக்கா நகரை சேர்ந்த துணை நடிகர் சுப்பிரமணியன், 56, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவர், துவக்கத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு 'லொக்கேஷன்' மேலாளராகவும், துணை நடிகர்களை ஏற்பாடு செய்யும் ஏஜன்ட் ஆகவும் செயல்பட்டார்.பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான, மைனா படத்தில் நடித்து பிரபலமான இவர், கும்கி, கழுகு உள்ளிட்ட திரைப்படங்களிலும், தமிழ் 'டிவி' சீரியல் ஒன்றிலும் நடித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன், தொடுபுழாவில், கட்சியின் இடுக்கி மாவட்ட மாநாட்டில் நேற்று முன்தினம் பங்கேற்று திரும்பிய போது, அடிமாலியில், இரவு 11:30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.