உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்ட நுழைவு தேர்வு வழக்குகள் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு

சட்ட நுழைவு தேர்வு வழக்குகள் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு

புதுடில்ல இளநிலை சட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு வினாத்தாளில் பல தவறுகள் இருந்ததாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக பல உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை ஒரே உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.சி.எல்.ஏ.டி., எனப்படும் சட்டக் கல்லுாரிகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு, கடந்தாண்டு டிச., 1ல் நடந்தது. இதன் முடிவுகள், டிச., 7ல் வெளியாயின.இந்நிலையில், இந்த நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாளில் பல தவறுகள் இருந்ததாக, பலர் வழக்குகள் தொடர்ந்தனர். டில்லி, கர்நாடகா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மும்பை, மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய உயர் நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த வழக்குகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் நடத்த உத்தரவிடக் கோரி, தேசிய சட்டக் கல்லுாரிகள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:இந்த வழக்குகளை ஒரே உயர் நீதிமன்றத்தில் விசாரித்தால், விரைவாக, உறுதியான உத்தரவுகள் பிறப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். அதனால், ஒரு உயர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்குகளை மாற்றலாம். இது தொடர்பாக, இந்த உயர் நீதிமன்றங்கள் பிப்., 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் சிறப்பாக செயல்படுவதால், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலாம். இது குறித்து விசாரித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியது.இதற்கிடையே மனுதாரர்கள் தரப்பில், பல்வேறு உயர் நீதிமன்றங்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
ஜன 16, 2025 08:31

சட்டத்திற்கு சட்ட பிரச்னை. காங்கிரஸ் வகுத்த சட்டம் வழக்கை உருவாக்க வகுக்கப்பட்டது. வாழ்நாளில் கூட வழக்கு தீராது. பிஜேபி அதனை மாற்றி அமைத்தால், ஆட்சிக்கு இடையூறு. அரசு நிர்வாகம் நீதியை எட்டி பார்ப்பது இல்லை. வழக்கு தீர பலனும் பாதிப்பும் உடன் துவங்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜன 16, 2025 07:58

கேள்வி கூட தயாரிக்க துப்பில்லாதவர்கள் எப்படி தரமான கல்வியை கொடுக்க முடியும் என்று நினைக்கத்தோன்றினாலும் இவர்கள் கடைசியில் பொய் மட்டுமே சொல்லப்போகிறார்கள். ஆகவே இதெல்லாம் பெரிய தவறல்ல என்ற முடிவுக்கே வரமுடியும். சத்யசீலர்களான நாலு வக்கீல்களை யாராவது அறிந்திருந்தால் கீழே பதிவிடவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை