உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கு: உச்சநீதிமன்றம் ரத்து

தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கு: உச்சநீதிமன்றம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குஜராத்தியர்கள் குறித்த பீஹார் மாஜி துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கடந்தாண்டு மார்ச் மாதம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குஜராத்தியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக ஆமதாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தேஜஸ்வி யாதவிற்கு கடந்தாண்டு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி தேஜஸ்வி யாதவ் 2023 அக்டோபரில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இது தொடர்பாக தேஜஸ்விக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜால் பூயான் ஆகியோர் ஜன. 29க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். இன்று நடந்த விசாரணையில் தாம் அறிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து அவதூறு வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anand
பிப் 14, 2024 11:17

சொன்னதை வாபஸ் வாங்கிவிட்டேன், இது நம்ம செந்தில் பாலாஜியோட ட்ரைனிங் போலிருக்கு.... திராவிட மாடல் இந்திய முழுவதும் வியாபித்துவிட்டது, விடியல் வாழ்க


Anantharaman Srinivasan
பிப் 13, 2024 22:43

பதவி பறிபோனவுடன் பயந்து விட்டாயா ..??


duruvasar
பிப் 13, 2024 22:12

தான் எடுத்த வாந்தியை தானே மீண்டும் எடுத்து உண்பது புள்ளிக்கூட்டணியின் தனித்துவம் என்பதற்கு நல்ல உதாரணம்.


rajasekaran
பிப் 13, 2024 20:31

தேஜஸ்வி தான் சொன்னதை வாபஸ் வாங்கி விட்டார்


தாமரை மலர்கிறது
பிப் 13, 2024 20:19

வாபஸ் பெற்றுவிட்டால், குற்றம் சரியாகிவிடுமா? வாய்க்கொழுப்பெடுத்த தேஜஸ்விக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்.


Godfather_Senior
பிப் 13, 2024 20:17

சில நீதியரசர்கள் யோக்கியமற்றவர்கள் இன்னும் சிலர் அயோக்கியர்கள் ஏன் சிலர் திருடர்களும்கூட என்மீது வழக்கு தொடுப்பார்களானால், நானும் இந்த எனது கருத்தை திரும்ப பெறுகிறேன் நீதியின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின்படி தேஜஸ்விக்கு கிடைக்கும் அதே சலுகை எனக்கும் கிடைக்கவேண்டும் . iNCRDIDBLE INDIAN JUDICIARY, INDEED


திகழ்ஓவியன்
பிப் 13, 2024 20:57

நீங்கள் ரஞ்சன் கொக்கை பற்றி சொல்லுகிறீர்களா


Rangarajan Cv
பிப் 13, 2024 21:22

Agree with you sir. Sounds very strange decision by sc.?


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 13, 2024 20:11

பீகாரிகள் சட்டம் ஒழுங்கை மதிக்காதவர்கள் ...... ஏற்கனவே அவர்கள் மீது குஜராத்தியர் காண்டாக இருந்தனர் ...... தேஜஸ்வி பேசிய பிறகு இன்னும் நிலை மோசம் ...... அவர்களுக்கு குஜராத்தில் வேலை கிடைப்பதே அபூர்வம் ஆகிவிட்டது ......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை