உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதூறு வழக்கு: ராகுலுக்கு ஜாமின்

அவதூறு வழக்கு: ராகுலுக்கு ஜாமின்

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு எதிராக பொய்யான விளம்பரம் கொடுத்த வழக்கு தொடர்பாக, அக்கட்சி தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜரான காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.கடந்த 2023 சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., அரசின் மீது '40 சதவீத கமிஷன்' அரசு, 'பேசிஎம்' என, குற்றம் சாட்டி சுவர்களில் காங்கிரசார், அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை படத்துடன் போஸ்டர்கள் ஒட்டினர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சித்தராமையா, சிவகுமார் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., வை 40 சதவீத கமிஷன் அரசு என, குற்றம் சாட்டினர். இதுமட்டுமின்றி 2023, மே 5ல், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தனர். இதனால் பா.ஜ., தர்ம சங்கடத்துக்கு ஆளானது. தலைவர்கள் கொதிப்படைந்தனர். கட்சி மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி, விளம்பரம் வெளியிட்டது குறித்து, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கர்நாடக பா.ஜ., முதன்மை செயலர் கேசவ பிரசாத், 2023 மே 8ல் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். மனு தொடர்பாக, விசாரணை நடத்திய நீதிமன்றம், நடப்பாண்டு மார்ச் 11ல் ராகுல், சித்தராமையா, சிவகுமாருக்கு 'சம்மன்' அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது. லோக்சபா தேர்தல் நடப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியாது. ஜூன் வரை கால அவகாசம் அளிக்கும்படி, மூவரும் தங்கள் வக்கீல் மூலம், நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர். நீதிமன்றமும் ஜூன் 1ல், ஆஜராகுமாறு உத்தரவிட்டது. சித்தராமையாவும், சிவகுமாரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று கொண்டனர்.ஆனால், ராகுல் ஆஜராகவில்லை. இன்று(ஜூன் 7) ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டது. இதன்படி, பெங்களூரு ஏசிஏஎம்எம் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர் ஆனார். அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Suresh R
ஜூன் 07, 2024 21:15

Show me the face I will tell you the rules- Indian justice fundamental. Only question required, Dear sir you told 40% commission, please give a proof first and then go on bail. This is common sense but uncommon in India


Kasimani Baskaran
ஜூன் 07, 2024 18:06

வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்லுவதில் ஏன் தேவையற்ற இழுபறி? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இவர்களுக்கு மட்டும் ஜாமீன் கேட்காமலே கிடைக்கிறது?


வாய்மையே வெல்லும்
ஜூன் 07, 2024 16:35

புளுகுமூட்டைகளின் கொட்டைத்தை அடக்க அரசியல் சாசனத்தில் கடுமையான நிபந்தனைகள் கூடிய சட்டதிட்டங்கள் உடனடியாக தேவை


canchi ravi
ஜூன் 07, 2024 15:00

சும்மா நீட்டி அடிச்சிண்டே போங்க மக்கள் மறந்துடுவாங்க. பெங்களூரு ராத்திரி போலீஸ் வண்டிகளைக் கொளுத்திய அயோக்கியர்கள் கேஸ் என்ன ஆச்சு? அதே கதைதான்.


Rpalnivelu
ஜூன் 07, 2024 13:21

இந்தியாவில் முதல் சீர்திருத்தம் செய்ய வேண்டியது நீதித் துறையைத்தான். புரையோடி விட்டது


Sridhar
ஜூன் 07, 2024 12:36

ஜாமீன் கொடுங்க தப்பில்ல, ஆனா கேச சட்டுபுட்டுன்னு முடிச்சு தண்டனை கொடுங்க.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 07, 2024 22:14

அப்படியே தண்டனை கொடுத்தாலும்,m டெல்லி உச்ச ஈதிமன்றத்தில் விலக்கு பெறுவார். நீதி துறையெங்கும் இவர்களின் ஓக்டோபஸ் கரங்கள் நீண்டு இருக்கின்றன. இல்லை என்றல் நேஷனல் ஹெரால்ட் வழக்குஇல் ஜாமின் பெற்று இன்னும் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.


rsudarsan lic
ஜூன் 07, 2024 12:11

அவ்ளோதான் இனி 2029ல விசாரிப்பார்கள் போல, போய் வேலைய பாருங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை