உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 22 ஆண்டுகளுக்கு பின்னர் ராணுவ அமைச்சர் இங்கிலாந்து பயணம்

22 ஆண்டுகளுக்கு பின்னர் ராணுவ அமைச்சர் இங்கிலாந்து பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 22 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டு நாள் பயணமாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இரண்டு நாள் பயணமாக நாளை ( 8-ம் தேதி) திங்கட்கிழமை இங்கிலாந்துக்கு புறப்படுகிறார். அந்நாட்டின் தலைநகர் லண்டனில் இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறை தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு பிரச்சினைகள் பற்றி விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பாதுகாப்புத்துறை அமைச்சர் உடன் டி.ஆர்.டி.ஓ., பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய உயர் மட்ட பாதுகாப்பு அமைச்சக குழுவும் செல்கிறது. என பாதுகாப்புத்துறை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடந்த 2002 ம் ஆண்டு இங்கிலாந்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
ஜன 08, 2024 06:34

போய் அந்நிய அடையாளங்களை அழிச்சிட்டு வாங்க.


Bye Pass
ஜன 08, 2024 00:23

இன்னும் ரெண்டு மாசம் ..


Anand
ஜன 08, 2024 10:57

அப்புறம் அதே உனக்கு பழக்கமாகிவிடும்....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ