உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தாமதம்: சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தாமதம்: சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸுக்குத் தாவிய பி.ஆர்.எஸ்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் மீதான தகுதி நீக்க மனுக்களில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக தெலுங்கானா அரசு, சபாநாயகர் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்) கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏழு எம்.எல்.ஏ.,க்கள், ஆளும் காங்கிரசுக்கு தாவினர். அந்த எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது தெலுங்கானா சட்டமன்ற சபாநாயகர் முடிவெடுப்பதை தாமதப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக, பி.ஆர்.எஸ்., கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதிகள் தெலுங்கானா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநில அரசு, சபாநாயகர் அலுவலகம், தெலுங்கானா சட்டமன்றச் செயலாளர், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் கட்சித் தாவிய எம்எல்ஏக்களிடமிருந்து பதில்களைக் கோரியது. விசாரணையின் போது, ​​தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நீடித்த தாமதத்தை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, 'இந்த செயல்முறை பதவிக்காலம் முடியும் வரை தொடருமா? அப்படியானால் ஜனநாயகக் கொள்கைகளுக்கு என்ன நடக்கும், தாமதங்கள் முடிவை அர்த்தமற்றதாக்கும்' என்று நீதிபதிகள் கூறினர்.விசாரணையை மார்ச் 25ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Dharmavaan
மார் 05, 2025 09:58

இவர்கள் நடத்தும் வழக்குகளும் இதைவிட தாமதமாகிறதே இவர்களை எப்படி தண்டிப்பது பிறர்க்கு புத்தி சொல்லும் அருகதை இவர்களுக்கு இல்லை கோர்ட் அவமதிப்பும் தவராக பயன்படுத்தப்படுகிறது


S Regurathi Pandian
மார் 05, 2025 08:09

எதிர்க்கட்சியில் இருப்பவர்களை ஆளும்கட்சி பக்கம் இழுப்பதை அனைத்து கட்சிகளும் செய்வதையும் எல்லோருமே ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதையும் இது காட்டுகிறது


visu
மார் 05, 2025 07:56

அரசியலமைப்புக்கு எதிரான தீர்மானங்களை நிரைவேற்றினால் குப்பை கூடைக்குதான் போகும்


moulee
மார் 05, 2025 00:23

மிகச் சரி


தாமரை மலர்கிறது
மார் 05, 2025 00:23

தெலுங்கானா அரசை டிஸ்மிஸ் செய்வது நல்லது.


Bye Pass
மார் 04, 2025 22:00

மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிந்தும் இப்படி சொல்வது சரியா


S.Martin Manoj
மார் 04, 2025 21:44

இங்க ஒருவர் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில் போட்டுள்ளார் நீதிபதி அவர்களே


Barakat Ali
மார் 04, 2025 21:37

அம்பேத்கர் சாருக்கு நன்றி ...........


sankaranarayanan
மார் 04, 2025 20:51

இந்த காலதாமத்தை உச்ச நீதிமன்றமே முடிவு எடுத்து அந்த மாநிலத்தை ஆளும் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அது மற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடமாகும் இதுபோன்றே ஒவ்வொரு மாநில சபாநாயகரும் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று பாவித்து வேண்டுமென்றே தாமதம் செய்வது அரசியல் கோட்பாடுகளுக்கு முற்றிலும் உகந்தது இல்லை


GMM
மார் 04, 2025 20:47

முதலில் வெற்றிக்கு உதவிய கட்சி, கொள்கை வலை கொடுத்து வாங்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் தாவிய பிரதிநிதிகள் பதிலை பெற்று இந்திய தேர்தல் ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் இதனை விசாரிக்க விரும்பினால், சமர்ப்பிக்க வேண்டும்.? உச்ச நீதிமன்றம் கீழ் அரசியல் சாசன அமைப்புகள் வர கூடாது. சபாநாயகர், ஆளும் கட்சி நிர்வாகத்திற்கு என்ன அதிகாரம் உள்ளது. ? சபைக்குள் மட்டும் அதிகாரம். அவர்கள் அனைவரும் தற்காலிக 5 ஆண்டுகள் பிரதிநிதிகள். ஏன் நோட்டீஸ். இவர்கள் பதில் செல்லுமா? சட்ட மன்றம் செயலர் சட்ட முடிவு கட்சி பரிந்துரை இல்லாமல் விதிப்படி எடுத்து, உச்ச மன்றத்தில் பதில் தாக்கல் செய்யலாம்.


முக்கிய வீடியோ