உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்தது. தேர்தல் முடிந்ததும் மீண்டும் சிறை சென்றார். அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது. சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது; அதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று(ஜூலை 25) டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
ஜூலை 25, 2024 18:41

தில்லி தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி கெஜ்ரிவாலுக்கு லாடம் கட்டுவதை மக்களே விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது ......


krishnan
ஜூலை 25, 2024 17:15

எல்லோரையும் ...சாராய ஊழல்


Swaminathan L
ஜூலை 25, 2024 17:02

அமலாக்கத்துறை வழக்கின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் சிபிஐ கைது நடவடிக்கையின் அடுத்த கட்ட நகர்வு சரியாகவும், விரைவாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உடல் எடை இருபது கிலோ குறைவு, இரத்தத்தில் சர்க்கரை அளவு உச்சத்துக்கும் பாதாளத்துக்கும் ஊசல் என்று ஆம் ஆத்மி இரட்டையர் நாயனக் கச்சேரி மாறி மாறித் தொடரும். உச்சநீதிமன்றம் சடாரென்று அவரை வெளி வரச் செய்யலாம்.


ganapathy
ஜூலை 25, 2024 16:56

நீதிபதிக்கும் வக்கீலுக்கும் நன்கு தெரிந்த உண்மை இவன் சந்தேகத்திற்குகற்பாட்ட வகையில் குற்றமிழைத்தவன் என்பது. ஆனாலும் நம்ம வரில கேசை இழுக்குறானுங்க. இழுக்க இழுக்க காசாச்சே...


Nandakumar Naidu.
ஜூலை 25, 2024 16:52

அதென்ன கொஞ்சம் கொஞ்சமாக? குற்றம் புரிந்தது உண்மை என்றால் மொத்தமாக 6 மாதத்திற்கு ஒரு முறை தான் ஜாமீன் விண்ணப்பத்தை விசாரிக்க முடியும் என்று தீர்ப்பு வழங்க வேண்டியது தானே. இதில் ஜெயிலில் இருந்து கொண்டு இன்னும் முதல்வர் பதவியில் நீடிப்பது வெட்கக்கேடு..


சிந்தனை
ஜூலை 25, 2024 15:42

ஒரு குற்றவாளியின் குற்றம் நிரூபணம் ஆன பிறகு, அந்த குற்றவாளியை குற்றம் அற்றவர் என்று வாதாடிய வக்கீலுக்கும் சேர்த்து, சமமான தண்டனை கொடுத்தால் தான், இந்த நாடு உருப்படும் போல தெரிகிறது... அறிவுள்ளவர்கள் சிந்திப்போமே


Swaminathan L
ஜூலை 25, 2024 17:05

ஆஹா, வாதாடிய வக்கீலுக்கும் சமமான தண்டனை என்று ஆகி விட்டால், குற்றவாளிகள் தனக்குத் தானே வாதாடும் கட்டாயம் நேரும்.


பாரதி
ஜூலை 25, 2024 15:39

ஒருவேளை நீதிபதியும் கொள்ளையடிக்காத நபரா இருப்பார் போல அதனாலதான் இது தவறு இல்லை என்று அவருக்கு புரியலை


Balasubramanian
ஜூலை 25, 2024 14:51

அடுத்தது அதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றம்! எங்களுக்கு பழகிப் போச்சு பாஸ்! நீங்களும் பழகிக் கொண்டு மருந்து மாத்திரை சரிவர எடுத்துக் கொண்டு சுகர் லெவலை பாருங்கள்! முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் அனைவருக்கும் நல்லது


Duruvesan
ஜூலை 25, 2024 14:50

ஆக நீதியும் சங்கி என இந்தி கூட்டணி கூவும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை