உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்

ஹனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(செப்.,14) ஹனுமான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த, அவர் இன்று, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலுக்குச் சென்றார்.அவருடன் மனைவி சுனிதா கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் உடன் சென்றனர். தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்வதில் உறுதியாக இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி