உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி முதல்வர் பிப்.20ல் பதவியேற்பு

டில்லி முதல்வர் பிப்.20ல் பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் என்று பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.டில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பா.ஜ., பிடித்துள்ளது. வெற்றி பெற்ற பா.ஜ.,வின் புதிய அரசு வரும் பிப்.20ம் தேதி வியாழன் அன்று காலை 11 மணிக்கு பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., சட்டமன்றக் கட்சிக் கூட்டம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும்.பதவியேற்பு விழாவிற்கு ராம் லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.டில்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனும், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தவருமான பர்வேஷ் வர்மா முதல்வருக்கான போட்டியில் இருக்கிறார். அதேபோல, முன்னாள் மாநில பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரியும் முதல்வருக்கான ரேஸில் நீடிக்கிறார். இருவரில் யாரேனும் ஒருவர் முதல்வராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் டில்லியின் ஏழு எம்.பி.க்களும் கலந்து கொள்வார்கள். அதை தொடர்ந்து தலைவர் துணை நிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.50க்கும் மேற்பட்ட திரைப்பட நட்சத்திரங்கள்,பிரபல தொழிலதிபர்கள்,பாபா ராம்தேவ், சுவாமி சிதானந்தா, பாபா பாகேஷ்வர் தீரேந்திர சாஸ்திரிமற்றும் முக்கிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் அழைக்கப்படுகிறார்கள்.மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள், பிற மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ., தலைவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anbuselvan
பிப் 18, 2025 21:01

இன்னமும் முதலைச்சர் யாருன்னே தெரியலை. ஆனால் விழா நிச்சயம் நடக்கும். இதுதான் பிஜேபி. திடீர்னு யாருமே எதிர்பார்க்காத ஒருவரை கொண்டு வந்து நிறுத்தலாம்.


Mohanakrishnan
பிப் 18, 2025 23:07

Yes a lady may become CM


Anbuselvan
பிப் 19, 2025 21:00

திரு மோஹன க்ரிஷ்ணன் கணித்ததை போல பிஜேபி ஒரு பெண் முதல்மந்திரியை நியமித்து இருக்கிறது.


raja
பிப் 18, 2025 17:30

இதுவே எங்க கட்டுமரமா இருந்தா வெற்றி பெட்ரா அடுத்த நாளே பதவியேற்று புறங்கை நக்க ஆரமிச்சு இருக்கும்...


Bye Pass
பிப் 18, 2025 19:37

முன்னங்கை என்ன பாவம் செய்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை