உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி முதல்வர் ரேகா குப்தா; இன்று பதவி ஏற்பு!

டில்லி முதல்வர் ரேகா குப்தா; இன்று பதவி ஏற்பு!

புதுடில்லி: டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iw3h1gep&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=027 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.,வில் அடுத்த முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது. இதையடுத்து, முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான ரவிசங்கர் பிரசாத், தேசியச் செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரை பா.ஜ.,மேலிடம் நியமித்தது. அதை தொடர்ந்து முதல்வரை தேர்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் டில்லியில் இன்று (பிப்.19) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், யார் முதல்வர் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பார் என்று பா.ஜ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்த முதல்வர் பெயரை துணை நிலை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க உள்ளார். அவரது ஒப்புதலுக்கு பின்னர், முதல்வர், இன்னபிற அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தா, ஷாலிமர்பாக் தொகுதியில் வெற்றி பெற்றவர். பதவியேற்பு விழா, இன்று (பிப்.20) நண்பகல் 12.35 மணியளவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள்,பிற மாநில பா.ஜ., தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு விழாவை முன்னிட்டு தலைநகர் டில்லியில் 25,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

யார் இந்த ரேகா குப்தா?

முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ரேகா குப்தா நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். கல்லூரி காலம் தொட்டே தீவிர அரசியலில் இறங்கியவர். நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் வென்றவர். அடிப்படையில் வக்கீலான ரேகா குப்தா, டில்லி பல்கலை. மாணவர் தலைவராக பணியாற்றியவர். 2007ல் உள்ளாட்சி தேர்தலில் கால் பதித்து உத்தரி பிதாம்புரா கவுன்சிலராக வென்றார். தெற்கு டில்லியின் மேயராகவும் முத்திரை பதித்தவர். தேசிய மகளிரணி துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது டில்லி பா.ஜ., பொதுச் செயலாளராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kulandai kannan
பிப் 20, 2025 11:40

வாரிசு அல்லாத முதல்வர்.


இலவஸ் சிங்
பிப் 20, 2025 11:08

ஃப்ரீ மணி... எப்போலேருந்து குடுக்கப் போறீங்கம்மா?


பிரேம்ஜி
பிப் 20, 2025 08:40

BJP ஆட்சியாளர்களும் ஒன்றும் புனிதர்கள் அல்ல நல்ல நிர்வாகம் செய்ய! கெஜ்ரிவால் ஊழலை இவர்கள் இன்னும் சிறப்பாக தொடருவார்கள்! உலகம் அவ்வளவுதான்!


பிரேம்ஜி
பிப் 20, 2025 08:35

ஒன்றும் ஆகாது! புதிய மொந்தை! பழைய கள்!


Ray
பிப் 19, 2025 22:43

ம்ம்ம்ம்ம்ம் ஆரம்பியுங்கள் எலிவேட்டை பெருச்சாளி சுண்டெலி எதையும் விடாமல் துரத்துங்கள். ஐந்தாண்டுகளையும் கோர்ட் கேசென்றெ அலையவிட வேண்டும் தினமும் ஒரு கைது வழக்குன்னு ஜெப்படி வித்தைகள் அரங்கேறனும் வேறென்னே வேண்டும் மக்களுக்கு? டிவிக்கு டிவி வாக்குவாதம் பிரதிவாதம்தான் வேண்டும்.


Balasubramanian
பிப் 19, 2025 22:08

நிச்சயம் முன்னாள் முதல்வர் அதிஷி பங்கேற்பார் என்று நம்புவோம்


Ramesh Sargam
பிப் 19, 2025 21:35

வாழ்த்துக்கள் ரேகா குப்தாவுக்கு. நேர்மையான, ஊழல் அற்ற ஆட்சி என்றால் என்ன என்று டெல்லி மக்களுக்கு காட்டவும்.


தாமரை மலர்கிறது
பிப் 19, 2025 21:22

டெல்லியில் வெற்றிக்கொடி ஏற்றப்பட்டது. அடுத்த விக்கெட் தமிழகம் தான். திராவிடக்குஞ்சுகளின் கதறல் சத்தம் அதிகமாக கேட்கிறது.


Sivagiri
பிப் 19, 2025 20:52

ராகுலை உ-பி யை விட்டே , விரட்டிய இராணியை போல , கெஜரிவாலை விரட்ட ஒரு ஆள் கிடைச்சாச்சு போல . . .


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 19, 2025 20:34

கால் நூற்றாண்டு கழித்து உங்களிடம் மக்கள் மீண்டும் நம்பிக்கை வைக்கிறார்கள் .... நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள் ...


பிரேம்ஜி
பிப் 20, 2025 08:44

மக்கள் ஏமாறவே பிறந்தவர்கள்! ஆட்சியாளர்கள் ஏமாற்றமே பிறந்தவர்கள்! இதுதான் என்றுமே மாறாத உலக நியதி! இதில் சனநாயகமோ, சர்வாதிகாரமோ எல்லாம் ஒன்றுதான்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை