புதுடில்லி: டில்லியில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் மழை நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மாநகராட்சி, தீயைணப்பு படை, போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. டில்லி ராஜேந்திரா நகரில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான ராஜேந்திரா கோச்சிங் சென்டர் உள்ளது. கீழ் தளத்தில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர்.இதில் மழைநீரில் திடீரென புகுந்தது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியில் வெளியேறினர். சிலர் தப்பினர் 10க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 3 பேர் பலியாகினர். 13 பேர் மீ்ட்கப்பட்டனர்.மாணவர்களை சமரசம் செய்த ஐ.பி.எஸ்., அதிகாரி!
கோச்சிங் சென்டர் முன்பு நேற்றிரவு மாணவர்கள் கூடினர். போராட்டம் நடத்திய மாணவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பினர். அப்போது ஐ.பி.எஸ்., அதிகாரி கூடுதல் டி.ஜி.பி., சச்சின் ஷர்மா பேசுகையில், ''நான் உங்களில் ஒருவராக இருந்து தான், தற்போது அதிகாரியாக மாறி உள்ளேன். நீங்கள் படும் கஷ்டம் என்ன என்பதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.நான் சீருடை அணிந்திருப்பதால், ஒன்றும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். எனக்கும் கடைகள் உள்ளது. பொறுமையாக உள்ளது. சட்டப்பூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல் கண்டனம்
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், காங்., எம்.பி., ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டில்லியில் உள்ள கட்டடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மாணவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழப்புக்கு ஒட்டுமொத்த நிர்வாக சீர்குலைவே காரணம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பான வாழ்வுக்கும் அரசுகளே பொறுப்பு. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். பயற்சி மையங்கள் மூடல்
ராஜேந்திரா கோச்சிங் சென்டர் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய அனைத்து பயிற்சி மையங்களையும் மூட மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டார்.