உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோயிலில் அனுமதி மறுப்பு: சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்

கோயிலில் அனுமதி மறுப்பு: சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கவுஹாத்தி: அசாமில் கோயிலில் வழிபாடு நடத்த காங்கிரஸ் எம்.பி ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல், நான் என்ன குற்றம் செய்தேன் ? என கேள்வி எழுப்பினார்.லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். அதன் படி, இன்று(ஜன.,22) ராகுல் அசாம் மாநிலத்தில் நகோன் நகரில் மேற்கொண்டார்.

அனுமதி மறுப்பு

அப்போது, அங்கு உள்ள துறவி ஸ்ரீமந்த் சங்கர் தேவ் கோயிலில் வழிபாடு நடத்த ராகுல் சென்றார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஸ்ரீமந்த் சங்கர் தேவ் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாகக் கூறி ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பிற்பகல் 3 மணிக்கு பிறகு கோயிலுக்கு வரும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், தான் அனுமதி பெற்ற பிறகே கோயிலுக்கு வந்ததாகக் கூறி போலீசாருடன் ராகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ராகுல் பேட்டி

அப்போது செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது: இன்று ஒருவர் மட்டும் தான் கோயிலுக்கு செல்ல முடியும். கோயிலுக்கு யார் செல்ல வேண்டும்?. எப்போது செல்ல வேண்டும் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்ய வேண்டுமா?. நான் என்ன குற்றம் செய்தேன் ?. இவ்வாறு அவர் கூறினார்.

தர்ணா

காங்., எம்.பி ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் மகளிர் அணியினர் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

shyamnats
ஜன 23, 2024 12:13

தமிழில் பேச்சு வழக்கில் ஒரு பழமொழி உண்டு. - அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு? என்று. இவர் வகையில் பொருத்தமாக தோன்றுகிறது.


Narayanan
ஜன 23, 2024 11:24

இறைவன் நினைத்தால் மட்டுமே நாம் கோவிலுக்குள் போகமுடியும் . ராகுலுக்கு அனுபவம் குறைவு. அதையும் அரசியலாக்கி பார்க்காதீர்கள்


வாய்மையே வெல்லும்
ஜன 23, 2024 07:00

தாய் ராமர் கோவிலுக்கு பகை கூப்பிட்டும்/ அழைத்தும் வரமாட்டேன் என ஜம்பம் .. குட்டி கோவிலை பார்க்க நாடகம் போடுது.. உங்க ரீல் சமாச்சாரம் கடவுளுக்கே பிடிக்கவில்லை போலும்


RAAJ68
ஜன 23, 2024 06:37

தீய சகதிகளுக்கு கோவில் ஒரு கேடா?


Rajarajan
ஜன 23, 2024 05:59

நீ யாருனு எங்களுக்கு தெரியும். நாங்க யாருனு உங்களுக்கு தெரியும்.


Ashok Subramaniam
ஜன 23, 2024 02:44

இப்படியும் ஒரு பொழப்பா தூ


அருண் குமார்
ஜன 23, 2024 00:39

பக்கத்துல சர்ச் இருந்ததே அங்க போய் இருக்கலாம்


Ramesh Sargam
ஜன 22, 2024 23:48

வீம்புக்கு பக்தி செய்பவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபடமாட்டார்கள்.


Yaro Oruvan
ஜன 22, 2024 23:31

டீச்சர் அவன் என்னோட லப்பர எடுத்துட்டான்.. டீச்சர் அவன் என்னோட பென்சில எடுத்துட்டான்..


M S RAGHUNATHAN
ஜன 22, 2024 22:33

கோயிலுக்கு செல்லும் ராகுலின் கால்களை பாருங்கள். ஷூ அணிந்து கொண்டு இருக்கிறார். இவர் தன்னை சிவ பக்தன், கவுல் பிராமணன் அதுவும் பூணூல் போட்ட பிராமணன், தத்தாத்ரேயர் கோத்திரம் என்று பீலா விடுகிறார். இவர் பெயரின் பின் காந்தி என்ற surname எப்படி வந்தது என்று சொல்லட்டும். இவர் தந்தையின், பாட்டனின் உண்மையான பெயரை சொல்லச் சொல்லுங்கள். அல்லது அவரது அல்லக் கைகளான K C Venugopal, Jairam Ramesh அவர்களாவது சொல்லட்டும்.


மேலும் செய்திகள்