உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயது முதிர்ந்தவர்களுக்கு சீட் மறுப்பு புது முகங்களுக்கு அடித்தது யோகம்

வயது முதிர்ந்தவர்களுக்கு சீட் மறுப்பு புது முகங்களுக்கு அடித்தது யோகம்

பா.ஜ., சீட் வழங்குவதில், புது யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போல், தற்போதைய ஒன்பது எம்.பி.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், பெங்களூரு வடக்கில், மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா, சீட் பெற்றார்.அரசியல் அனுபவம் இல்லாத புது முகங்களுக்கும், தற்போது எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,யாக இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என்றும், வாய்ப்பு வழங்கியது ஏன் என்பதற்கும் தலா மூன்று காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.வாய்ப்பு கிடைக்காத எம்.பி.,க்கள்:15_Sadananda Gowdaபெங்களூரு வடக்கு - சதானந்தகவுடா, 70:* மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கம்* அமைச்சர், எம்.பி.,யாக சரியாக செயல்படாதது* வயது முதிர்வு15_Srinivas Prasadசாம்ராஜ்நகர் - சீனிவாச பிரசாத், 76:* உடல் நலன் பாதிப்பு* வயது முதிர்வு* தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு15_Basavarajuதுமகூரு - பசவராஜு, 82:* வயது முதிர்வு* உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு* தேர்தலில் போட்டியிட விருப்பமின்மை15_Karadi Sangannaகொப்பால் - கரடி சங்கண்ணா, 73:* கட்சி தொண்டர்கள், பிரமுகர்கள் எதிர்ப்பு* எம்.பி.,யாக சரியாக செயல்படாமை* குறைந்த செல்வாக்கு15_Siddehswarதாவணகெரே - சித்தேஸ்வர், 71:* வயது முதிர்வு* கட்சி தொண்டர்கள், பிரமுகர்கள் எதிர்ப்பு* அனுபவம் இருந்தும், செயல்படாமை15_Nalin Kumar Kateelதட்சிண கன்னடா - நளின்குமார் கட்டீல், 57:* 3 முறை எம்.பி.,யாகியும் செயல்படாமை* தொகுதியில் வளர்ச்சி பணிகள் மந்தம்* மாநில தலைவராக கட்சியை வளர்ப்பதில் தோல்வி15_Prathap Simhaமைசூரு - பிரதாப் சிம்ஹா, 47:* தொண்டர்களிடம் இடைவெளி* தலைவர்களுடன் ஒருங்கிணைப்பு இல்லாதது* சர்ச்சை விஷயங்களில் சிக்கியது15_Shivakumar Udasiஹாவேரி - சிவகுமார் உதாசி, 56:* தேர்தலில் போட்டியிட விருப்பமின்மை* தொகுதியில் இருந்து விலகி இருந்தது* கட்சியை பலப்படுத்துவதில் செயல்படாமை15_Devrappaபல்லாரி - தேவேந்திரப்பா, 72:* வயது முதிர்வு* எம்.பி.,யாக சரியாக செயல்படாமை* மக்களிடம் எதிர்ப்பு அதிகரிப்பு**************15_Yaduveerமைசூரு - யதுவீர், 31:* மன்னர் வம்சம் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பு* பிரதாப் சிம்ஹா மீதான எதிர்ப்பு அலை* இளைஞர், புதுமுகம், சிறந்த வரலாற்று பின்னணி15_Manjunathபெங்களூரு ரூரல் - மஞ்சுநாத், 66:* மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு* காங்., சுரேஷுக்கு இணையான செல்வாக்கு* ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி ஆதரவு15_Balrajசாம்ராஜ்நகர் - பால்ராஜ், 40* இளைஞர்களின் ஆதரவு* நீண்ட கால அரசியலுக்கு உகந்த நபர்* காங்கிரஸ் ஓட்டுகளை ஈர்க்கும் திறமை15_Brijesh Chowtaதட்சிண கன்னடா - பிரிஜேஷ் சவுடா, 42:* புது முகத்தால் கூடுதல் லாபம்* முன்னாள் ராணுவ வீரர், படித்தவர்* கட்சியை பலப்படுத்துவதில் ஆர்வம்15_Gayathri Siddeshwarதாவணகெரே - காயத்ரி சித்தேஸ்வர், 67:* எம்.பி., சித்தேஸ்வர் குடும்பம்* மகளிர் கோட்டாவில் வாய்ப்பு* மக்களின் ஆதரவு பெற்றவர்15_Shobhaபெங்களூரு வடக்கு - ஷோபா, 57:* மகளிருக்கு முன்னுரிமை* ஒக்கலிகர் ஓட்டு வங்கி* எடியூரப்பா ஆதரவு 15_Somannaதுமகூரு - சோமண்ணா, 73:* துமகூரு மடாதிபதியின் ஆதரவு* தொகுதியை தக்க வைக்கும் கணக்கு* தேவகவுடாவின் சிபாரிசு15_Basavaraj Gavatarகொப்பால் - பசவராஜ் கியாவடார், 38:* இளைஞர், ஆர்வத்துடன் செயல்படுபவர்* சாமானிய தொண்டர் என்ற ஆதரவு அலை* மருத்துவராக மக்களிடையே செல்வாக்கு15_Kota Srinivas Poojaryஉடுப்பி, சிக்கமகளூரு - கோட்டா சீனிவாச பூஜாரி, 64:* கட்சிக்கு நேர்மையாக செயல்படுதல்* சர்ச்சையில் சிக்காத எளிய தலைவர்* சாதாரண தொண்டரும் சுலபமாக சந்திக்கும் நபர்15_Basavaraj Bommaiஹாவேரி - பசவராஜ் பொம்மை, 64:* எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு உரியவர்* இரண்டாம் கட்ட லிங்காயத் தலைவர்* முதல்வரான அரசியல் அனுபவம்15_Sriramuluபல்லாரி - ஸ்ரீராமுலு, 53:* எஸ்.டி., சமுதாய தலைவர்* தொகுதியில் அசைக்க முடியாத நம்பிக்கை* கட்சியை பலப்படுத்துவதில் ஆற்றல் மிக்கவர்***- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி