உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல; ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல; ஜெய்சங்கர் விளக்கம்

புதுடில்லி: ''சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல,'' என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dr8wkxv2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானத்தில் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து கை விலங்குடன் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: இந்தியர்களை மரியாதைக்குறைவாக நடத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் கூறியுள்ளோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தாங்கள் அனுபவித்த வேதனையை பகிர்ந்துள்ளனர். நாடு கடத்தப்படுவோர், தடுத்து வைக்கப்படும் நடைமுறை 2012ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. பெண்கள், குழந்தைகள் அவ்வாறு செய்யப்படவில்லை. அமெரிக்காவின் நடவடிக்கையில் எந்த நடைமுறை மாற்றமும் இல்லை. 104 இந்தியர்கள் திரும்பி வந்த விவகாரத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்தியர்களை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு அனுப்பிய இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை பாயும். சட்ட விரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

அமெரிக்கா விளக்கம்

இது தொடர்பாக, அமெரிக்கா அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 'சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின்படியே இந்தியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தேசிய மக்கள் பாதுகாப்புக்கு சட்டத்தை உரிய முறையில் அமல்படுத்துவது முக்கியம். சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் படியே அனுப்பி வைக்கப்பட்டனர்' என அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
பிப் 07, 2025 11:51

இவுரு எப்பவுமே பேண்ட் சூட்டில் இருக்காரே? எப்போ அந்நிய அடையாளத்தை துறக்கப் போறாரு?


Amar Akbar Antony
பிப் 06, 2025 23:28

அமெரிக்கர்களல்ல அப்பாவியாக முகமூடியிருக்கும் மார்கமே தங்கள் சொன்ன கோடிக்கணக்கானோர் பங்காளதேசிகள்


அப்பாவி
பிப் 06, 2025 18:55

அமெரிக்காவிலிருந்து இங்கே கள்ளத்தனமா குடியேறியிருக்கும் பல கோடி அமெரிக்கர்களை இந்தியாவுலேருந்து வெளியேற்றி பதிலடி குடுங்க.


Thiyagarajan S
பிப் 06, 2025 20:46

லூசாய்யா நீ.....அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பல கோடி பேர் கள்ளத்தனமாக ஊடுருவி இருக்காங்களா போய் நல்ல பைத்தியக்கார டாக்டரா போய் பாரு.....


சிந்திப்பவன்
பிப் 06, 2025 18:46

அப்படின்னா நாமும் அதை ஏன் செய்யக்கூடாது ?


அப்பாவி
பிப் 06, 2025 17:11

டில்லில ஏதாவது சாமான் கிடைக்கலேன்னா தான் வெட்கப்படுவாரு. கள்ளக் குடியேற்றமெல்லாம் ஓக்கே.


தத்வமசி
பிப் 06, 2025 15:02

நான் வளைகுடா நாட்டில் பணியாற்றிய போது ஒரு முறை விமானத்தில் சென்று கொண்டிருந்த போது, எனது பக்கத்து சீட்டில் ஒரு இளைஞ்சர் அமர்ந்திருந்தார். அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். முதல் முறையாக செல்வதாக கூறினார். இரண்டு வருடங்கள் ஒப்பந்தம் என்று கூறினார். பேச்சின் நடுவில் அவரே விசாவை எடுத்துக் காட்டினார். ஆனால் விசா தாளில் மூன்று மாதம் - சுற்றுலா விசா என்று அச்சிட்டிருந்தது. நன்றாக யாரிடமோ ஏமாந்து விட்டார் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வதைத் தவிர என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. அது போல மற்றொருவர் ஏதோ ஒரு விசாவில் வந்து விட்டு காய்கறி கடை வைத்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வாரம் இருமுறை காய்கறி வருகிறது என்றார். நல்ல வியாபாரம். சில மாதங்களே நீடித்தது. போலீஸ் வந்து வேலை அனுமதி தாளை கேட்ட போது அது காய்கறி வியாபாரத்திர்கானது அல்ல என்று கூறி கடையை அடைத்து விட்டனர். விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டனர். எல்லாம் வெளிநாட்டு வேலை மோகம் ஒரு பகுதி என்றாலும் முக்கியமானது ஏஜண்ட். அவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் அப்பப்பா... கொடுமை. நிறைய இந்தியவர்கள் மாட்டிக் கொண்டு முழிக்கின்றனர்.


சிவம்
பிப் 06, 2025 14:58

சரி. இறக்குமதி செய்து விட்டீர்கள். ஏற்றுமதி எப்போது.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 14:42

ஏதோ பாஜகதான் பல இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு குடியேற்ற அனுப்பி வைத்தது போல, பாஜகவின் கோரிக்கையால்தான் கைவிலங்கு இடப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டது போல ரகளை, கூச்சல் செய்துள்ளனர் எதிர்க்கட்சி எம்பிக்கள் ..... அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் ....


Baskar
பிப் 06, 2025 14:42

ஏஜென்ட் எல்லாரையும் உள்ள போடுங்க


முக்கிய வீடியோ