UPDATED : ஜன 05, 2024 07:21 PM | ADDED : ஜன 05, 2024 07:11 PM
ராஞ்சி: கிரிக்கெட் அகடாமி துவங்குவது தொடர்பாக தன்னிடம் ரூ. 15 கோடி ஆட்டைய போட்டு விட்டதாக இரு தொழில் பங்குதாரர்கள் மீது இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் (தல) மகேந்திர சிங் தோனி கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அராகா ஸ்போர்ட்ஸ் மேலாண்மை என்ற நிறுவனம் நடத்தி வரும் , மிஹிர் திவாகர், சவுமியா விஷ்வா ஆகிய இருவரும், கிரிக்கெட் அகடாமி துவங்க பங்குதாராக இணையுமாறு இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் (தல) தோனியை அணுகினர். இதையடுத்து, தொழி்ல் பங்குதாரராக தோனி சேர்ந்தார். இது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.ஒப்பந்தப்படி அகாடமி துவங்கவில்லை. தோனி தரப்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லாததால், தன்னிடம் ரூ. 15 கோடி பெற்று மோசடி செய்துவிட்டதாக ராஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருவரும் மீது தோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.