உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?: வைரலாகும் வீடியோ

தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?: வைரலாகும் வீடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழிசையிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா சீரியஸாக பேசும் வீடியோ வைரலாகியுள்ளது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது.தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, பா.ஜ., தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் தோல்வியடைந்தாலும், சில தொகுதிகளில் அதிமுக.,வை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்திருந்தது. இதனை வரவேற்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்ததாகவும், அதிமுக.,வை விட பா.ஜ., நல்ல நிலையில் இருப்பதாகவும் பேசியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d460z00q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேநேரத்தில், தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி கவர்னர் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், 'அதிமுக.,வுடன் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வென்றிருக்கலாம். நாங்கள் ஒரு வியூகம் அமைத்திருந்தோம். கூட்டணி வைப்பதால் மோசம் போய்விட மாட்டோம். ஆனால், அண்ணாமலைக்கு எங்கள் வியூகத்தில் விருப்பம் இல்லை' என அண்ணாமலையை விமர்சித்திருந்தார். ஒரே கட்சியை சேர்ந்த இரு முக்கிய தலைவர்கள் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டதால் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழிசை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷாவை சந்தித்து, வணக்கம் கூறினார். உடனே தமிழிசையை அருகில் அழைத்த அமித்ஷா, அவரிடம் ஏதோ சீரியஸாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Indian
ஜூன் 15, 2024 10:43

பேசாம வேற ஏதாவது கட்சில பொய் சேருங்க இவ்வளவு திட்டு கேட்டுட்டு இந்த கட்சில இருக்கணுமா


kalyan
ஜூன் 13, 2024 21:50

தமிழ்நாட்டில் இவருக்கு செல்வாக்கு இல்லை என்று 2019 வரை நிரூபித்த தமிழிசைக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கொடுத்ததே பிஜேபியின் பெரிய தவறு . உப்புப்போட்டு தான் சோறு திண்கிறீர்களா என்று கனிமொழி அவர்கள் 2019 ல் கேட்டது நினைவுக்கு வந்து கவர்னராகவே தொடர்ந்திருக்க வேண்டும்


Krush
ஜூன் 13, 2024 16:14

What you do to others is what you get back.. when she stooped to such a low level, this is what she deserves if at all that information is true..


RAAJ68
ஜூன் 13, 2024 10:49

இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.


Nagercoil Suresh
ஜூன் 13, 2024 08:31

அரசியல் கட்சியை கட்டுக்கோப்பாய் வைப்பது அவ்வளவு எளிதல்ல, மைக்கை கண்டவுடன் துள்ளி குதித்க்கொண்டு பேட்டி கொடுப்பதற்கு செக் வைப்பது தேவை தான், அண்ணாமலைக்கும் டோஸ் கிடைத்திருக்கும் என்பது இதிலிருந்து புலப்படுகிறது .... பொதுவெளியில் பேசக்கூடாது என கண்டிப்பதை பொது மேடையில் கை யை காட்டி பேசியது தவறாக பார்க்கப் படுகிறது... தமிழிசையை பொறுத்தமட்டில் வயதில் பெரியவர், தமிழகத்தில் மூத்த பாஜக தொண்டர்களில் அவரும் ஒருவர், நேர்மையானவர், மனதில் பட்டவைகளை அப்படியே கூறுபவர், இடம் ஏவல் அறிந்து செயல்படுவதே சாலச்சிறந்தது...


sethu
ஜூன் 13, 2024 14:41

இதென்ன அவர்களுடைய அப்பா உள்ள காங்கிரசு காட்ச்சியா மைக் கிடைக்கும்போதெல்லாம் கானா பாட்டுப்பாட ,கவர்னரின் கௌரவத்தை கெடுத்த சண்டாளி இந்த தமிழிசை ,நைனார் மற்றும் வானதி போன்ற ஸ்லீப்பர் செல்களை வெடிவைத்து தகர்க்கவேண்டும் அப்போதுதான் பிஜேபி தமிழகத்தில்பொது மக்களுக்கு நல்லது செய்யமுடியும் .


Vijay
ஜூன் 13, 2024 07:03

Painful to see several people have lost empathy may be due to their wisdom being blurred by blind faith. I strongly feel that the former Governor should have been treated in a decent manner in front of a full public gathering. Issues if any can be sorted outside the public eyes. At the end of the day, we humans have to keep humanity high. Values are more valuable than anything else.


Bhaskaran
ஜூன் 13, 2024 06:23

நிர்மலா கண்டிப்பாக கட்டுத்தொகை பறிகொடுத்த இருப்பார்


SP
ஜூன் 12, 2024 22:58

அதிகாரபூர்வமான தமிழக தலைவரை விமர்சிப்பவர்களை தயவு தாட்சணமின்றி கண்டிக்கவேண்டும்.


venugopal s
ஜூன் 12, 2024 21:59

தமிழிசை அவர்கள் ரோஷப்பட்டு பாஜகவில் இருந்து விலகி விடுவாரோ? சேச்சே, பாஜகவில் யாருமே அவ்வளவு தன்மானம் ரோஷம் உள்ளவர்கள் கிடையாதே!


Anvar
ஜூன் 13, 2024 08:18

வேற கட்சிகளில் உள்ளது திரு கூறவும்..


அப்புசாமி
ஜூன் 12, 2024 20:56

பாவம்... கெவுனரா இன்னும் ரெண்டு வருஷம் ஓட்டியிருக்கலாம். விதி யாரை விட்டது கோவாலு?


மேலும் செய்திகள்