மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
டில்லியில் பார்லிமென்ட், மத்திய அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்தையும் உள்ளடக்கிய பகுதி, 'சென்ட்ரல் விஸ்டா' என அழைக்கப்படுகிறது. புதிய பார்லிமென்ட் திறந்தாகி விட்டது; பிரதமர் வீடும் தயார்; மற்ற அரசு அலுவலகங்களின் கட்டுமான பணியும், முடியும் நிலையில் உள்ளது. தற்போது, துணை ஜனாதிபதியின் வீடும் தயார் நிலையில் உள்ளது.இந்த புதிய வீட்டிற்கு, வரும் புதன்கிழமை குடிபுக உள்ளார் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான, ஜக்தீப் தன்கர். 'காதலர் தினமான அன்று புதுமனை புகுவிழாவா?' என்று கேட்டால், சிரிக்கிறார். காதலர் தினத்தன்று தான் அவருடைய திருமண தினமாம். மனைவி மீது பாசத்தைப் பொழியும் தன்கர், திருமண நாளில் புது வீட்டில் குடியேற விரும்புகிறார்.பழைய அரசு பங்களாவில் நிறைய பிரச்னைகள்; பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம். இதனால், சென்ட்ரல் விஸ்டாவில் புதிய வீடு கட்டி தர மோடி அரசு முடிவெடுத்தது. புதிய வீட்டில், 12 அறைகளும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, புதுமனை புகுவிழாவிற்கு அழைத்துள்ளார் ஜக்தீப் தன்கர்.
4 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago | 2