உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாரதா கோயிலில் தீபாவளி பண்டிகை உற்சாகம்: விளக்கு ஏற்றி பக்தர்கள் பரவசம்

சாரதா கோயிலில் தீபாவளி பண்டிகை உற்சாகம்: விளக்கு ஏற்றி பக்தர்கள் பரவசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சாரதா கோயிலில் தீபாவளி பண்டிகை விளக்குகள் ஏற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகே குப்வாரா மாவட்டத்தின் டீட்வால் என்ற பகுதியில் உள்ள சாரதா தேவி கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. கடந்த 1947 ம் ஆண்டு நாடு பிரிவினைக்கு பிறகு, காஷ்மீரை பாகிஸ்தான் ஆதரவுடன் பழங்குடியினர் ஆக்கிரமித்த போது இக்கோயில் தீவைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. அருகில் இருந்த குருத்வாரா மற்றும் தர்மசாலாவும் சேதப்படுத்தப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x7c35pf2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்கோயிலை, சிருங்கேரி மடத்தின் ஆதரவுடன் மீண்டும் கட்டும் பணி 2021ம் ஆண்டு துவங்கியது. அதே இடத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு பிறகு, இக்கோயிலில் கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.இந்நிலையில், இக்கோயிலில் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோயில் முழுவதும் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டது. இவ்விழாவில் காஷ்மீர் பண்டிட்கள், உள்ளூர் மக்களுடன் ராணுவ வீரர்களும் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி, இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடினர். உலகம் முழுவதும் இருக்கும் சாரதாவின் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ