உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டோல் வசூலிக்கக் கூடாது!

டோல் வசூலிக்கக் கூடாது!

தரமான சாலைகளை வழங்காமல் மக்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சிறந்த தரத்துடன் சாலைகளை தந்துவிட்டு சுங்கக் கட்டணம் வசூலித்தால் மக்கள் ஏற்பர். குண்டும் குழியுமான சாலைக்கு சுங்கக் கட்டணம் கேட்டால் மக்கள் ஆத்திரமடைவர். நிதின் கட்கரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஜனநாயக மன்றத்தின் நீதிபதி!

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பார் மற்றும் அதன் தலைவர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்குவார் என நம்புகிறேன். சபாநாயகர் என்பவர் ஜனநாயக மன்றத்தின் தலைமை நீதிபதி.அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி

உத்வேகம் ஏற்பட்டுள்ளது!

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியிலும் உத்வேகத்தை ஏற்படுத்திஉள்ளது. பார்லிமென்டிலும் சரி, வெளியிலும் சரி, மக்களின் குரலாக ஒலிப்பவர் ராகுல்.சச்சின் பைலட், மூத்த தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ravi Shankar
ஜூன் 27, 2024 10:07

ஐயா மத்திய அமைச்சர் அவர்களே, சென்னை முதல் ராணிப்பேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் நடந்து வருகிறது, பல வருடங்களாக. பழைய சாலையின் ஒப்பந்த காலம் முடிந்தபின்னும் பணம் வசூலிப்பு நடந்து வருகிறது. அணைத்து கட்சிகளுக்கும், மீடியாவிற்கும், அதிகாரிகளுக்கும், நீதித்துறைக்கு உட்பட அனைவருக்கும் தெரியும். தெரிந்து என்ன ஆக போகிறது. பொது ஜனம் கஷ்டத்திற்கு ஏது விடிவு காலம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ