உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அழகா இருந்தா கட்டணம் கேட்பீங்களோ; இண்டிகோ பயணி கேள்வியால் கிளம்பியது விவாதம்!

அழகா இருந்தா கட்டணம் கேட்பீங்களோ; இண்டிகோ பயணி கேள்வியால் கிளம்பியது விவாதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பயணி அழகா இருந்தா கட்டணம் வசூலிப்பீங்களோ' என்று இண்டிகோ பயணி எழுப்பிய கேள்வியால், சமூக வலைதளத்தில் சுவாரஸ்யமான விவாதம் கிளம்பியுள்ளது. இண்டிகோ ஏர்லைன் பயணியான ஷ்ரயான்ஷ் சிங், விமான கட்டண டிக்கெட்டில் இருந்த விவரங்களுக்கு விளக்கம் கேட்டு பதிவிட்டுள்ளார். அதில், 'கியூட் சார்ஜஸ்' என்றொரு கட்டண வகை குறிப்பிட்டு, 50 ரூபாய் வசூலித்துள்ளனர். 'யூசர் டெவலப்மென்ட் சார்ஜ்' என்ற பெயரில், 1003 ரூபாய் வசூலித்துள்ளனர்.

பதிலளிக்கவும்

ஷ்ராயான்ஷ் சிங் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அது என்ன கியூட் கட்டணம்? பயணி அழகாக இருந்தால் கட்டணம் வசூலிக்கிறீர்களா? அல்லது உங்கள் விமானங்கள் அழகாக இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?பயனர் மேம்பாட்டுக் கட்டணம் என்றால் என்ன? உங்கள் விமானத்தில் பயணிக்கும்போது என்னை எப்படி நீங்கள் மேம்படுத்துவீர்கள்? அது என்ன விமான பாதுகாப்பு கட்டணம்? நான் பயணம் செய்யும் போது எனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நான் அரசாங்கத்திற்கு வரி செலுத்தவில்லையா? தயவுசெய்து பதிலளிக்கவும்' என கூறியிருந்தார்.

இண்டிகோ நிறுவனம் பதில்

இதற்கு இண்டிகோ நிறுவனம் பதில் அளித்துள்ளது. அவர்கள் கூறியிருப்பதாவது:கியூட் என்பது, 'காமன் யூசர் டெர்மினல் எக்யூப்மென்ட்' என்பதன் சுருக்கம். அதைத்தான் கியூட் சார்ஜ் என்று குறிப்பிட்டுள்ளோம். மெட்டல் டிடெக்டர், எஸ்கலேட்டர் போன்றவற்றின் பயன்பாட்டுக்கான கட்டணம்.பயனர் மேம்பாட்டுக் கட்டணம் என்பது விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வசூலிக்கப்படும் கட்டணமாகும். விமானப் பாதுகாப்புக் கட்டணங்கள் இந்தியாவில் உள்ள விமான நிலைய ஆபரேட்டர்களுக்காக, வசூலிக்கும் கட்டணமாகும்'' என இண்டிகோ ஏர்லைன் நிறுவனம் பதில் அளித்துள்ளது.பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள இந்த பதிவுக்கு, ஏராளமான நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh RK
ஆக 24, 2024 11:30

மதுரை சென்னை விமானகடடனம் மிகவும் அதிகம்


Natarajan Ramanathan
ஆக 20, 2024 21:18

ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு கணினி வாங்கி வைத்துவிட்டு பல வருஷங்களாக பல ஆயிரம் கோடிகள் கணினி சேவை கட்டணம் என்று தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் கொள்ளை அடிக்கிறார்களே அதைவிட ஒரு பெரிய கொடுமை இருக்கமுடியுமா?


சமூக நல விரும்பி
ஆக 20, 2024 15:25

சாதாரண பஸ் கட்டணத்தை பார்த்தாலே எத்தனை வகையாக பணம் பிடுங்கி மக்களை சுரண்டுகிரார்கள். விமானத்துக்கு கேட்கவே வேண்டாம்


Mr Krish Tamilnadu
ஆக 20, 2024 14:56

என்ன சார் விபரம் புரியாத ஆளா இருக்கா? உள்ளாட்சி அலுவலகத்தில் அப்ரூவல் கட்டணம் ரசீது பார்த்தீங்கனா. அவ்வளவு சேவை கட்டணங்கள் இருக்கும். அதே மாதிரி இ.பி. புது கனெக்சன் ரசீது பாருங்க. எல்லாம் டொபாசிட் அப்படியுனு நாமாக நினைக்க கூடாது. சேவை கட்டணங்கள் போக, கொஞ்சம் தான் டொபாசிட் தொகை. அதுவும் ஒரு வேளை கனெக்சன் வேண்டாம் என முடிக்கும் போது, திருப்பி தவறுவதாக சொல்லுவாங்க. ஆனா தர மாட்டாங்க. இவ்வளவு ஏன் யூனிட் மின்சார அளவு. நீங்களா கணக்கு போட முடியும்?. முடியாது. அதில் சேவை கட்டணங்கள் உள்ள இருக்கும். நீங்க போடும் கணக்கு தப்பாவே வரும். ஆனா வெளியா மக்கள் கிட்ட, நாங்கள் இந்த இந்த துறையின் அதிகப்படி செலவுக்கு நிதி வழங்குவதாக கூறுவார்கள். எல்லாம் மாயை. நம்மிடம் வரியை மட்டும் வாங்கி இவ்வளவு வசதிகள் செய்து தருவதாகவும், பயன்படுத்துவதற்கு தகுந்த குறைந்த கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுவதாகவும் நினைத்து கொள்ள வேண்டியது தான்.


N.Purushothaman
ஆக 20, 2024 14:27

தமிழ்நாட்டுல இருக்குற செய்தி சேனல்களுக்கு தான் கண்டன்ட் தட்டுப்பாடா இருந்துச்சி ...இப்போ அது தினசரி நாளிதழ்களும் வந்துடுச்சா ?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ