உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுத்தமான குடிநீருக்கே நிதியில்லை; தனி சைக்கிள் பாதை தேவையா?

சுத்தமான குடிநீருக்கே நிதியில்லை; தனி சைக்கிள் பாதை தேவையா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி l புனே உள்ளிட்ட நகரங்களை போலவே, நாடு முழுதும் குறிப்பிட்ட நகரங்களில் சைக்கிள் செல்ல பிரத்யேக பாதை அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, தாவிந்தர் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.உச்ச நீதிமன்றத்திலும் இதுபோன்ற பாதை அமைக்கும்படி மனுவில் அவர் கோரி இருந்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தனி நபருக்கு எதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும், எது மிகவும் அத்தியாவசியமான பிரச்னை என்பதை மனுதாரர் புரிந்துகொள்ள வேண்டும். குடிசைப் பகுதிக்குச் சென்று, அங்கு வாழும் மக்களின் நிலைமையை பாருங்கள். அவர்களுக்கு சுகாதாரமான குடிநீர், வீடு போன்ற அடிப்படை வசதிகளைக் கூட செய்து தருவதற்கு நிதி இல்லாமல் மாநில அரசுகள் தவிக்கின்றன. அரசு பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படுகின்றன.இந்த சூழலில் சைக்கிள் செல்ல தனிப்பாதை கேட்டு பகல் கனவு காண்பதா? தனிநபரின் வாழ்க்கை மற்றும் அடிப்படை சுதந்திரம் பற்றிய அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு பற்றி நாம் கவலைப்பட வேண்டும். மிக அவசரமான தேவைகள் பற்றி மட்டுமே கவலை கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறிய நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Easwar Kamal
பிப் 17, 2025 18:59

அமெரிக்கா போன்ற நாடுகளிலில் கூட தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. ஒரு வெளி நாட்டுக்காரன் வந்தால் அவன் பார்ப்பது அந்த நகரம் எப்படி உள்ளது என்றுதான்.


N.Purushothaman
பிப் 11, 2025 11:45

நீதிபதிகளின் தராதரம் பல்லை இளிக்கிறது..அசுரர் வளர்ச்சி கண்டுள்ள பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டி செல்ல தனி பாதை அமைப்பது தவிர்க்க முடியாதது. ஏற்கனவே உள்ள சாலையில் ஒரு பகுதியை சைக்கிள் செல்லும் பாதையாக மாற்றுவதில் என்ன கேடு வந்துவிட போகிறது? எதற்கு எதனுடன் முடிச்சி போட்டு பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சி


தண்ணிபாபு
பிப் 11, 2025 10:47

ஒரு ஊர்ல ஒரு ஜீ ஜல்ஜீவன் ஜல்ஜீவன்னு ஒரு ஸ்கீம்.போட்டு எல்லோருக்கும் குடிநீர் குடுத்தாச்சுன்னு மெடல் குத்திக்கிட்டது கனம் நீதிபதிக்கு தெரியாது போல. பாதி வல்லரசாயிட்டோம் நாம.


N Sasikumar Yadhav
பிப் 11, 2025 15:37

உங்க மானங்கெட்ட திராவிட மாடலுதான் இணைப்பு கொடுக்காமல் நீலநிற பைப்பை செருகி போட்டோ பிடித்து மத்தியரசின் ஜல்ஜீவன் திட்டத்திலும் ஆட்டய போட்டது சில நாட்களுக்கு முன் வீடியோ வந்ததே வீடியோ பதிவிட்டவரை உங்க விடியாத திராவிட மாடலின் காவல்தொறை ஓடி ஓடி கைது செய்ததே


N.Purushothaman
பிப் 11, 2025 21:56

இந்த ஊப்பி பேருக்கு இப்படி ஒரு அடைமொழி கொடுத்துகிச்சு போல.....


karthik
பிப் 11, 2025 09:32

என்ன நீதிபதிகளோ.. எந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்று புரியவில்லை. நீதிபதி கவலைப்படும் அதே குடிசை வாசிகள் ஏழைகள் தான் அதிகம் சைக்கிளை பயன்படுத்துகின்றனர். நீதிபதி சொல்லும் அதே உரிமை அடிப்படையில் ஏழைகள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏதுவாக தனி சைக்கிள் பாதை அவசியம் என்பதை ஏன் உணராமல் போனார்???


sankaran
பிப் 11, 2025 08:47

கோர்ட், ஜட்ஜ் முதற்கொண்டு தன்னை அறியாமல் குதர்க்கம் பேசுகிறார்கள். ஏன் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியர்கள் ஓடுகிறார்கள்.. காரணம் வசதி.. தண்ணியும் முக்கியம்.. தனி வழி பாதையும் முக்கியம்..


Kasimani Baskaran
பிப் 11, 2025 08:34

மனுக்கொடுத்தவருக்கு அபராதம் விதிக்கவில்லை என்பது மிக்க மகிழ்ச்சி. வழக்குகள் கோடிக்கணக்கில் தேங்கிக்கிடக்கும் பொழுது இது போல வெட்டி மனுக்களை விசாரிப்பது கிரிமினல் குற்றம்.


அப்பாவி
பிப் 11, 2025 07:54

போங்க போங்க ரோடுகளில் சைக்கிளில் போய் அடிபட்டு சாவுங்க. அல்லாருக்கும் வூடு குடுத்து முடிச்சிடோம்ல.


orange தமிழன்
பிப் 11, 2025 07:22

தனி வழி மிகவும் அவசியம்... சைக்கிள் ஒட்டுபவரின் பாதுகாப்பு கருதி...