உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாக்டர்களின் புரியாத மருந்து சீட்டு கையெழுத்து : ஒடிசா ஐகோர்ட் ‛ குட்டு

டாக்டர்களின் புரியாத மருந்து சீட்டு கையெழுத்து : ஒடிசா ஐகோர்ட் ‛ குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வரம்: அரசு / தனியார் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டை கையால் எழுதாமல் கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும். இது தொடர்பாக அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என ஒடிசா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து புரியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதி பனிகிராஹி, அரசு, தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து ,கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaran
ஜன 09, 2024 08:53

இந்த பிரச்னை ரொம்ப காலமாக உள்ளது...அப்படி என்னதான் அடுத்தவர்களுக்கு புரியாமல் எழுதணுமோ....முற்போக்கு எழுத்தாளர்கள் என்று கூறி கொள்ளும் நபர்களுக்கும் இந்த புத்தி உள்ளது...


Ramesh Sargam
ஜன 09, 2024 00:06

அரசு / தனியார் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டை கையால் எழுதாமல் கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும், என்று ஒரு சட்டம் இயற்றி அதை முறையாக அனுசரிக்கவேண்டும் என்று எல்லா மருத்துவர்களுக்கும், மருத்துவ மனைக்கும் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். மீறுபவர்களை தண்டிக்கவேண்டும்.


raghasrin
ஜன 08, 2024 22:49

this rule must be implemented all over India.Doctors should understand and write clear priscriptions


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை