உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., அரசின் மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உ.பி., அரசின் மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மதரசா கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் உத்தர பிரதேசம் மதரசா கல்வி வாரியச் சட்டம் செல்லும். அதே நேரத்தில், மதரசாக்கள் வழங்கும் சில பட்டப் படிப்புகளுக்கு இது பொருந்தாது' என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முஸ்லிம்களுக்கு மதம் சார்ந்த கல்வி வழங்கும் மதரசாக்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு, உத்தர பிரதேசம் மதரசா கல்வி வாரியச் சட்டம் 2004ல் அமல்படுத்தப்பட்டது.

சான்றிதழ்

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் அளித்த உத்தரவில், அது செல்லாது என்று கூறியிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக இருப்பதால் இந்தச் சட்டம் செல்லாது என, உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்த நிலையில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது: மதரசா கல்வி வாரியச் சட்டம், மதரசாக்களில் அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டுஉள்ளது. மேலும், சிறுபான்மையினருக்கு தரமான கல்வி கிடைப்பதுடன், முறையாக தேர்வுகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்குவதே இந்த சட்டத்தின் நோக்கமாக உள்ளது. மதரசாக்களில் படிப்போர், மற்ற மாணவர்களைப் போல உயர்கல்வி பெறுவதுடன், சமூக வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான திறன்களை பெறுவதே இந்த வாரியத்தின் நோக்கமாகும்.தனிமனித உரிமை, கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றுடன் இணைத்தே, மதம் மற்றும் மொழி ரீதியில் சிறுபான்மையினருக்கான உரிமையையும் பார்க்க வேண்டும்.அந்த வகையில், இந்த கல்வி வாரியத்தை உருவாக்கும் சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லும்.அதனால், உத்தர பிரதேசம் மதரசா கல்வி வாரியச் சட்டம் செல்லும். இந்தச் சட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாநிலத்தில் தற்போதுள்ள மதரசாக்கள் தொடர்ந்து செயல்படலாம்.

அரசியலமைப்பு

மத சுதந்திரம், தனிமனித சுதந்திரம் மீறப்படுகிறது என்பது போன்ற காரணங்களைக் கூறி, அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக உள்ளதாக, ஒரு சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை இவ்வாறு அறிவிக்க முடியும்.அனால், இந்தக் காரணங்களைக் கூறி ஒரு சட்டத்தை ரத்து செய்ய முடியாது. சட்டம் இயற்றுவதற்கான உரிய அதிகாரம் இல்லாதது அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு அளித்துள்ள சம உரிமை, சமத்துவத்துக்கு எதிராக உள்ளது போன்ற காரணங்களால் மட்டுமே ரத்து செய்ய முடியும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

'யு.ஜி.சி.,யில் தலையிடக்கூடாது'

தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறியதாவது: உ.பி., மதரசா சட்டம் செல்லும் என்றாலும், 'பாசில், காமில்' ஆகிய உயர் பட்டப் படிப்புகளில் இந்த சட்டம் தலையிட முடியாது. அது, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு சட்டத்தில் தலையிடுவதாக அமைந்துவிடும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.மதரசாக்களில் கற்றுத் தரப்படும் பாசில் என்பது, இரண்டு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பாகவும், காமில் என்பது இரண்டு ஆண்டு முதுநிலை பட்ட படிப்பாகவும் கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Raj S
நவ 06, 2024 01:29

அப்போ தவறான தீர்ப்பு சொன்ன அலகாபாத் நீதிபதிகளை என்ன பண்ணலாம்?? நம்ம நாட்டின் நீதித்துறை முற்றிலுமாக கலைந்தெடுக்க படவேண்டிய ஒரு துறை... உச்ச நீதிமன்றத்திலிருந்து இது ஆரம்பிக்கணும்... தீர்ப்பு மதம் சார்ந்து இருக்கக்கூடாது... உண்மை எது, சரியானது எதுன்னு இருக்கணும்... அதுக்கு உச்ச நீதிமன்றத்தில் சரியான நீதிபதிகள் இருக்கணும்...


தாமரை மலர்கிறது
நவ 05, 2024 23:52

இந்த தீர்ப்பு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும்.


Suppan
நவ 05, 2024 21:33

தமிழகத்தில் உள்ள வேதபாடசாலைகளில் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளிலும் சென்று மற்ற பிள்ளைகளை போன்று படிக்கிறார்கள். அல்லது அருகில் உள்ள பள்ளிகளிலிருந்து சில ஆசிரியர்கள் வந்து ஆங்கிலம், கணிதம், அறிவியல் , கணினி போன்ற பாடங்களை போதிக்கிறார்கள். இந்த மாணவர்கள் தேர்வையும் எழுதுகிறார்கள். மதரஸா மாணவர்களையும் மற்ற பாடங்களையும் படிக்க வைக்க வேண்டும் .


Ganapathy
நவ 05, 2024 19:31

மொதல்ல ஐயப்பனின் ஸன்னதிக்கு யார் வரவேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்ல என்ன தகுதியுள்ளது? இஸ்லாமியம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஒரு ஸ்லீப்பர் ஸெல்லாக இருந்து ஸாதகமானமான ஒருவர் தீர்ப்பு சொல்லும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.


Nagarajan D
நவ 05, 2024 19:22

நமது நீதிமன்றங்கள் எப்போதுமே சிறுபான்மையினர் நலனில் மட்டுமே அக்கறை கொள்கிறது... மதசார்பற்ற நாட்டில் எதற்கு ஒரு பிரிவினருக்கு சலுகை? நமது பாரதத்தில் மட்டுமே நீதிமன்றங்கள் பெரும்பான்மையினரின் நலனில் அக்கறை காட்டாமல் சிறுபான்மையினரின் மீது மட்டுமே அக்கறையோடு தீர்ப்புகள் வழங்குகிறது....


Sivagiri
நவ 05, 2024 18:39

கட்டாய கல்வி என்ற பெயரில் , கட்டாயமாக மூளை சலவை செய்யப்படுகிறது . . . கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும் . . .


பாமரன்
நவ 05, 2024 19:08

எதுக்கு... மத்திய அரசு குலக்கல்வி அல்லது ஓட்டு போடுறவனுவ பாஷையை எல்லாரும் படிக்க சொல்லி அடாவடி பண்ணவா...?? சில பாடங்கள் தவிர... வரலாறு, சமூக அறிவியல் போன்று... மற்ற பாடத்திட்டம் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருக்க ஒரு வழிமுறை செஞ்சாலே போதும்...


Sathyanarayanan Sathyasekaren
நவ 05, 2024 22:19

உன் குடும்பம் பாதிக்கப்படும்போது மதர்ஸாவின் கொடூர முகம் உனக்கு தெரியவரும்.


Ganapathy
நவ 05, 2024 18:36

காலிஸ்தானிகள் எப்படி கனடாவின் அனைத்து சட்ட அமைப்புகளிலும் ஊடுவியுள்ளறோ அதுவாகவே இங்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் நமது நீதித்துறையில் மேலிருந்து கீழ்வரை ஊடுருவியுள்ளன என்பது இந்த தீர்ப்பு மூலம் தெளிவாகியுள்ளது.


Dharmavaan
நவ 05, 2024 18:08

மத ரீதியான எல்லா சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும் அப்புறம் என்ன சட்டத்தின் முன் சமம் கேவலமான நீதி


Sivagiri
நவ 05, 2024 17:56

மார்க்கத்தை படிப்பது பின்பற்றி வாழ்வதற்குத்தானே , மற்றவர்களை எதிரிகளாக்குவதற்கா , மற்றவர்களை அழிப்பதற்கா , மற்றவர்களின் மார்க்கத்தை அழிப்பதற்கா ? . . அதுதான் மார்க்கமா , முயலின் ஒரு காலை கையில் பிடித்துக் கொண்டு , பார்த்தீர்களா முயலுக்கு மூணு கால்தான் - என்று சாதிப்பதற்கா ? . . .


GMM
நவ 05, 2024 17:40

மதராச கல்வி வாரிய சட்டம் காஸ்மீர் தனி அந்தஸ்து போன்றது. இசுலாமியர் அல்லாதோர் கற்க முடியாது. சிறுபான்மை அந்தஸ்து கால வரையறை மற்றும் எதன் அடிப்படையில் உருவாக்க பட்டது என்று கூறாத பட்சத்தில் செல்லாது. மக்கள், தேச நலனுக்கு ஓவ்வாத தீர்ப்பு .


புதிய வீடியோ