உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி உள்நாட்டு விமான கட்டணம் அதிகபட்சமே ரூ.18,000 தான்; மத்திய அரசு கிடுக்கிப்பிடி

இனி உள்நாட்டு விமான கட்டணம் அதிகபட்சமே ரூ.18,000 தான்; மத்திய அரசு கிடுக்கிப்பிடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உள்நாட்டு விமான கட்டணத்திற்கு அதிகபட்சம் ரூ.18,000 உச்ச வரம்பு நிர்ணயித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட பாதிப்பு இன்றும் நீடிக்கிறது. விமான சேவை ரத்தால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். விமான சேவை ரத்து ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பிற விமான நிறுவனங்களின் பயணக் கட்டணமும் தாறுமாறாக உயர்ந்து கொண்டே இருந்தது.சேவை ரத்து, கட்டணம் உயர்வு என விமான பயணிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்துள்ள தருணத்தில், அதற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது. அதன்படி உள் நாட்டு விமான போக்குவரத்து கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.அதன்படி, உள்நாட்டு வான்பரப்பில், 500 கிமீ தூரத்துக்கு ரூ.7500 அதிகபட்ச கட்டணம் 500-1000 கிமீ தூரத்துக்கு ரூ.12,000 கட்டணம்1000 கிமீ - 1500 கிமீ தூரத்துக்கு ரூ.15,000 கட்டணம் 1500 கிமீ தூரத்துக்கு மேல் ரூ.18.000 கட்டணம் என மத்திய அரசு புதிய கட்டணத்தை நிர்ணயித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கட்டண உச்சவரம்பானது வணிக வகுப்பு (Business class) வகைகளுக்கு பொருந்தாது. மேலும், பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் பின்தங்கிய பகுதிகளுக்கான விமான சேவை (RCS UDAAN) திட்டத்திற்கும் பொருந்தாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ