உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடிந்தது தொகுதி பங்கீடு; மஹாராஷ்டிராவில் 150 தொகுதிகளில் பா.ஜ., போட்டி?

முடிந்தது தொகுதி பங்கீடு; மஹாராஷ்டிராவில் 150 தொகுதிகளில் பா.ஜ., போட்டி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., 140 முதல் 150 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மஹாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 287 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் தற்போது பாஜ., -சிவ சேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகிக்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாதியில் விட்ட ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன.அதேநேரத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி உள்ளது. இதன்படி, பா.ஜ.,140 முதல் 150 வரை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே தரப்பு 80 தொகுதிகளிலும், அஜித்பவார் 55 தொகுதிகளிலும் போட்டியிடக்கூடும் எனவும், சிறிய கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mohamed Ibrahim
செப் 17, 2024 14:38

ஆம் முடிந்தது...


சமூக நல விரும்பி
செப் 10, 2024 22:09

காங்கிரஸ் கட்சியை இந்தியாவிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும்


T.sthivinayagam
செப் 10, 2024 20:12

பீகார் மாநில முதல்அமைச்சர் நிதிஷ் அவர்கள் ஏனோ நினைவில் வருகிறார்


தாமரை மலர்கிறது
செப் 10, 2024 19:21

ஷிண்டே மற்றும் அஜித் பவார் என்ற இந்த ரெண்டு எடுபிடிகளுக்கும் தலா இருபது சீட் கொடுத்தால் போதும். அதிக சீட்கள் கொடுத்தால், ஜெயிக்க மாட்டார்கள். ஒருபோதும் மக்கள் எடுபிடிகளை தலைவராக்க விரும்பமாட்டார்கள். சிறந்த உதாரணம் நம்மூர் எடுபிடி எடப்பாடி. ஒரு பெண் எப்படி கோழையை விரும்பமாட்டாளோ, அதே மாதிரி, மக்கள் ஒருபோதும் எடுபிடியை தலைவராக விரும்ப மாட்டார்கள்.


nagendhiran
செப் 10, 2024 19:10

லல்லு, கெஜர்வால், ஸ்டாலின் கூட கூட்டணி வைத்துட்டு ஊழல் பற்றி பேசுவது போலதான்?


MADHAVAN
செப் 10, 2024 17:44

அஜித்பவார் கூட கூட்டணி, ஆனால் பிஜேபி காரனுங்க ஊழலுக்கு எதிரியா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 18:02

கூடா உறவு .... நினைவுக்கு வருதா மாதவா ?? என்னது இல்லையா ?? கீழே ரெயிடு .... மேலே கூட்டணி பேச்சு வார்த்தை ..... இப்ப ஞாபகம் வந்தே ஆகணும் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 18:07

ஊழல் வழக்கு வேண்டாம் என்று கதறி இந்திராவின் காலில் விழுந்த உனது மாஜி தலைவன் பல ஆண்டுகளுக்குப் பிறகு போபர்ஸ் ஊழல் வெடித்த சமயத்தில் வி பி சிங்குடன் சேர்ந்து கொண்டு காங்கிரசை எதிர்த்தான் .... அதே காங்கிரசுடன் பிறகு கூட்டணி வைத்தான் .... டூ ஜீ யில் சம்பாதித்தான் ....


Yaro Oruvan
செப் 10, 2024 20:09

மாதவா அஜித் பவார் கான்+கிராஸ் புள்ளி கும்பல்ல இருக்காருப்பா


Srinivasan Krishnamoorthi
செப் 10, 2024 16:52

அஜித் பவார் ? யோசிக்க வேண்டிய விஷயம்


A Viswanathan
செப் 10, 2024 17:22

ஒற்றுமையாக இருந்து இண்டி கூட்டணியை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை