உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய பேரிடராக அறிவியுங்கள்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கோரிக்கை

தேசிய பேரிடராக அறிவியுங்கள்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கோரிக்கை

திருவனந்தபுரம்: ‛‛ நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சூழ்நிலை சரியில்லாததால், உதவ முன்வருவோர் நேரடியாக வயநாடு வர வேண்டாம். நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் '' என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.நிலச்சரிவு பகுதிகளில் நடக்கும் மீட்பு பணிகள் தொடர்பாக திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

தீவிரம்

இக்கூட்டத்திற்கு பிறகு, பினராயி விஜயன் கூறியதாவது: பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். முண்டக்கை பகுதியில் உயிருடன் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர். மாயமானவர்களை மட்டும் தேடி வருகிறோம். சாலியாற்றங்கரையோர பகுதிகளில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தி அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆலோசனை

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள், சிறார்கள், உறவினர்களை இழந்தவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்படும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு முகாம்களில் இருக்கக்கூடும். அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி நடக்கிறது. முகாம்களில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தினரை காணவில்லை என தேடிப்போக வேண்டாம். பட்டியல் தாருங்கள். நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம்.

வேண்டாம்

சூழ்நிலை சரியில்லாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருவோர் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

v8jay
ஆக 01, 2024 23:46

மண் சரியும் பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதித்தது யார் குற்றம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 02, 2024 08:03

தமிழகத்தில் இருந்து கல்லும் மண்ணும் டன் கணக்கில் தினந்தோறும் கொண்டு சென்று தினம் தினம் எடையை மண் திட்டுகள் மேல் ஏற்றிக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்? பாரம் தாங்காமல் மண் இளகும் போது இது போன்ற அசம்பாவிதம் தான் நடக்கும்.


K.n. Dhasarathan
ஆக 01, 2024 20:55

மத்திய அரசு ஏன் இன்னும் வேடிக்கை பார்க்கிறது? தேசிய பேரிடராக அறிவித்து தாராளமாக நிவாரணம் அறிவிக்கலாம், 350 பேருக்கு மேல் இறந்தும் இன்னும் மனம் வரவில்லை, பெரும் பணக்கார முதலைகளுக்கு, பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்த அரசு இப்போது நல்ல நேரம் பார்க்கலாமா? குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது மறுநாளே 1000 கோடி அறிவித்த பிரதமர் இப்போது மௌனம் ஏன் ?


தாமரை மலர்கிறது
ஆக 01, 2024 20:06

தேசிய பேரிடர் என்று அறிவித்து அதன் மூலம் வரும் நிதியை ஆட்டையை போடலாம் என்று பினராய் விஜயன் எண்ணுகிறார். கெஜ்ரிக்கு அடுத்த லெவெலில் தங்க கடத்தல் செய்த இந்தியாவிலேயே அதிக ஊழல் செய்த முதல்வர் பினராய் விஜயன் தான். இவருக்கு பத்து பைசா கொடுத்தால் கூட லவட்டி விடுவார். வயநாட்டு மக்கள் அவர்களாகவே மீண்டுவருவார்கள். மத்திய அரசு எதுவும் செய்ய தேவை இல்லை.


Rajeswaran
ஆக 01, 2024 18:06

இந்த ஆள் மீண்டும் முதலமைச்சர் ஆனது தான் பெரிய தேசிய பேரிடர் கம்யூனிஸ்டுகள் அதாவது உண்டியல் பாய்ஸ் உலகின் பேரிடர்


Mali
ஆக 01, 2024 17:33

இந்திய எதிர்ப்பு கொள்கை கொண்ட எந்த தீவிரவாதி நாட்டுக்கும், அவர்கள் தொரடர்புடைய உண்டியல் குலுக்கிஈன பிறவிக்கும் நன்கொடை இல்லை. உன்னோட கொள்கையில் மலையை காலிசெய்து வீடு காட்டுவ, ஹோட்டல் காட்டுவ, ரிசார்ட் காட்டுவ. செண்பகவல்லி அணைக்கட்டு அழித்தது, முல்லை பெரியார் ஆக்கிரமிப்பு செய்தது, இந்த எல்லா சாபமும் உன்னோட சந்ததிகளை கொல்லும்.


Apposthalan samlin
ஆக 01, 2024 16:53

மத்திய பிரதேஷ் இல் நடந்து இருந்தால் அறிவிக்கலாம் கேரளா தமிழ்நாடு வெஸ்ட் bengal இல் நடந்தால் எப்படி arivibarkal


ஆரூர் ரங்
ஆக 01, 2024 16:12

எதுக்கும் சவூதியில் மெக்கா மதீனாவில் உண்டியல் குலுக்கி முயற்சிக்கலாம்.( கால்வாசி கேரளா அங்குதான் இருக்கிறது)


ஆரூர் ரங்
ஆக 01, 2024 15:15

தேசீய பேரிடர் என அறிவிக்க சட்டமே இல்லை. முதல்வராக இருக்கவே தகுதியற்றவர். ( ஸ்வப்னா சுகந்தன்னே?)


raja
ஆக 01, 2024 14:43

வருடா வருடம் நில சரிவில் புதையும் மக்களை காக்க வக்கில்லை... ஆனால் பலமாக இருக்கும் பெரியார் அனையை இடிக்க வேண்டும் என்று கூறுவார்கள்....


Mali
ஆக 01, 2024 14:29

முதல்வரே, உங்க மாநிலத்தில் இந்துக்கள் சாபம் உங்களை சும்மா விடாது.


Apposthalan samlin
ஆக 01, 2024 16:48

செத்ததும் இந்துக்கள் தானெ அறிவு கொழுந்து


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை