உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிங்க் வாட்ஸாப் பயன்படுத்தாதீர்கள்! கர்நாடக போலீஸ் துறை எச்சரிக்கை

பிங்க் வாட்ஸாப் பயன்படுத்தாதீர்கள்! கர்நாடக போலீஸ் துறை எச்சரிக்கை

பெங்களூரு : 'எந்த காரணத்தை கொண்டும், பிங் வாட்ஸாப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்' என, கர்நாடக போலீஸ் துறை எச்சரித்துள்ளது.இது குறித்து, போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கை:சைபர் குற்றத்தின் மற்றொரு முகம், பிங் வாட்ஸாப். பொதுமக்கள் இதை இன்ஸ்டால் செய்தால், அபாயம் நேரிடும். இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கவர்ச்சிகரமான பிங் வாட்ஸாப் பயன்படுத்துவோரை குறிவைத்து, சைபர் குற்றவாளிகள் செயல்படுகின்றனர்.மக்களின் டேட்டாக்களை திருட, ஆன்ட்ராய்டு மொபைல் போனை ஹேக் செய்ய, பிங் வாட்ஸாப்பை பயன்படுத்துகின்றனர். ஒருவேளை இதை இன்ஸ்டால் செய்தால், ஹேக்கர்கள் உங்களின் போட்டோக்கள், வீடியோக்கள், நெட் பாங்கிங் பாஸ் ஒர்டுகள், எஸ்.எம்.எஸ்.,கள் உட்பட, தனிப்பட்ட தகவல்களை திருடுவர். எனவே விழிப்புடன் இருங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை