உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பல்கலை வளாகத்தில் போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு ஓட்டளிக்காதீர்கள்

டில்லி பல்கலை வளாகத்தில் போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு ஓட்டளிக்காதீர்கள்

புதுடில்லி:''டில்லி பல்கலைக்கழக வளாகத்தில் போஸ்டர் ஒட்டி நாசப்படுத்தியவர்களுக்கு ஓட்டளிக்காதீர்கள்,'' என, டில்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங் கேட்டுக் கொண்டார். டில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த, 2024ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஏழு ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் சார்பிலான என்.எஸ்.யு.ஐ., வெற்றி பெற்றது. தலைவர் மற்றும் இணை செயலர் பதவிகளில் அந்த கட்சி ஆதரவிலான மாணவர்கள் வெற்றி பெற்றனர். அதுபோல, ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு ஏ.பி.வி.பி., தலைமையிலான மாணவர்கள், செயலர் பதவி மற்றும் துணைத் தலைவர் பதவிகளை பெற்றனர். இந்த ஆண்டில் நடந்த தேர்தலின் பதிவான ஓட்டுகளை எண்ணாமல், டில்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 'டில்லி பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து, வளாகத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வரும் வரை ஓட்டு எண்ணிக்கை கூடாது' என உத்தரவிட்டுள்ளது. இதை, 'சீரமைப்பு என கருத வேண்டும். தண்டனையாக கருதக் கூடாது' என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டில்லி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த, என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., அமைப்பினர் கூட்டத்தில் பங்கேற்ற, துணை வேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங் பேசியதாவது: டில்லி பல்கலைக்கழக வளாகத்தில் போஸ்டர் ஓட்டி, நாசப்படுத்தியவர்களுக்கு நீங்கள் ஓட்டளிக்கக் கூடாது. அவ்வாறு ஓட்டளிக்க மறுத்திருந்தால், யாரும் இந்த வளாகத்தில் போஸ்டர்கள் ஒட்டியிருக்க மாட்டார்கள். யாருக்கு ஓட்டளிப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம், ஓட்டளிக்கும் மாணவர்கள் வசம் இருக்க வேண்டும். அதை யாரும், போஸ்டர்கள் வாயிலாக தெரிவிக்கத் தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை