உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து சந்தேகம்: ரேவந்த் ரெட்டிக்கு கடும் எதிர்ப்பு

சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து சந்தேகம்: ரேவந்த் ரெட்டிக்கு கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத் : லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடந்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும், மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.இதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ., குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கடும் எதிர்ப்பை தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l0m5hzq4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

போலீஸ் படை

'இண்டியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், ஜம்மு -- காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே, நம் நாட்டுடன் இணையும் என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், 'பாகிஸ்தான் கைகளில் வளையல் அணிந்திருக்கவில்லை. அவர்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அது நம் தலையில்தான் விழும்' என, அவர் கூறியிருந்தார்.காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இதேபோன்று கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில், காங்கிரசைச் சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்ததா என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், 2019 பிப்ரவரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 பேர் கொல்லப்பட்டனர்.

மோசமான அரசியல்

பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். உங்களுடைய உளவுத்துறை என்ன செய்தது. இந்த தாக்குதல், உளவுத் துறையின் தோல்வியில்லையா. புல்வாமா தாக்குதலையும் அரசியல் செய்ய நீங்கள் பயன்படுத்தவில்லையா. புல்வாமா தாக்குதல் எப்படி நடந்தது? அதை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாக கூறுகின்றனர். உண்மையில் அதுபோன்ற ஒன்று நடந்ததா என்பது சந்தேகமாக உள்ளது. அது குறித்து எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா பா.ஜ., மூத்த தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க காங்கிரஸ் தலைவர்கள் ஏன் முயற்சிக்கின்றனர். தெலுங்கானாவில் பல இடங்களில், காங்கிரஸ் ஆட்சியின்போது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அப்போது உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அவர்கள் பேசவில்லை. போகிற போக்கை பார்த்தால், அதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்களோ, வன்முறைகளோ நடக்கவில்லை என்று சொன்னாலும் சொல்வர். பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்குவதற்காக, நம் ராணுவத்தின் திறன்கள் குறித்து சந்தேகத்தை எழுப்புகின்றனர். இவர்கள் மிகவும் மோசமான அரசியல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

haridoss jennathan
மே 19, 2024 11:26

தேசப்பற்று இல்லாதவர் எது போன்ற தலைவர்களால் கட்சி தலைந்துபோக கரணம் பொறுப்புடன் பேச விடும் ஒரு தலைவர்


R Kay
மே 11, 2024 17:21

உளறுவதை விட்டு மக்களுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என சொல்லி வோட்டு சேகரியுங்கள்


ஆரூர் ரங்
மே 11, 2024 16:46

மும்பைத் தாக்குதலின் போது தாங்கள் பிஜெபி யில் இருந்தது நினைவிருக்கிறதா?


S Ramkumar
மே 11, 2024 16:28

அப்ப மும்பை தாக்குதல் நடந்த போது காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. ஏன் தடுக்கவில்லை. என்ன செய்து கொண்டு இருந்தது. தாக்குதலுக்கு பின்னர் காங்கிரஸ் கை கட்டி மவுனம் காத்து கொண்டு இருந்ததே


ஆரூர் ரங்
மே 11, 2024 16:45

எதிர் நடவடிக்கையெடுக்காமல் இருப்பதற்கு இட்தாலி கும்பலுக்கு நல்ல கவனிப்பு அளிக்கப்பட்டதாம்.


Santha Kumar
மே 11, 2024 17:44

அமெரிக்கா பதில் தாக்குதலுக்கு ஆதரவு தரவில்லை


இறைவி
மே 11, 2024 16:15

ரெட்டிகாரு, இரண்டாயிரத்து இருபத்தியாரில் மோடி பதவி துறந்தாலும், யோகி, அண்ணாமலை மாதிரி இன்னும் கடுமையான ஒருவர்தான் பிரதமராக வருவர். பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையே நாட்டு நலன் மட்டுமே முதன்மை. உங்களுக்கு இது மிக நன்றாக தெரியும். இரண்டாயிரத்து இருபத்து ஒன்பதிலும் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது.


Suppan
மே 11, 2024 15:40

உள்துறை மந்திரி ஷிவ்ராஜ் பாட்டில் அதிரடிப்படை மும்பைக்கு விரைவதை தாமதப்படுத்தினாரே அது எதற்காக என்று சொல்ல முடியுமா?


C.SRIRAM
மே 11, 2024 14:51

இந்த மாதிரி தேச விரோத கேணயங்களை முதலில் அடியோடது நசுக்க வேண்டும்


sankar
மே 11, 2024 14:44

இந்த ஆளு ஏற்கெனெவே பிஜேபியில் இருந்தவர் - இப்படி ஏதாவது பேசாவிட்டால் ராகுல் நம்பமாட்டாரே


Iniyan
மே 11, 2024 13:29

பாகிஸ்தானை விட கிட்டிய விஷமிகள் இந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் நீதி மன்றங்கள் இந்த விஷமிகள் மீது விமான படை தாக்குதல் நடத்தினால் போதும்


p.s.mahadevan
மே 11, 2024 12:46

ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லாத மனிதர்களை இன்னும் எத்தனை நாள் சந்திக்க வேண்டுமோ,


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை