உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று அயோத்தி செல்கிறார் திரவுபதி முர்மு

இன்று அயோத்தி செல்கிறார் திரவுபதி முர்மு

புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று (மே.01) அயோத்தி சென்று ராமர் கோயில் சென்று ராமரை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உபி. மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர்கோயிலை கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து கருவறையில் பாலராமர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார்.இதில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே.01) அயோத்தி ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறப்பு விமானம் மூலம் வரும் ஜனாதிபதியை விமான நிலையத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் வரவேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

திருமலை
மே 01, 2024 09:21

சுத்து வட்டாரம் 25 கிலோமீட்டருக்கு ஈ காக்காய் இல்லாம 20000 போலூசோட பாதுகாப்பா சாமி கும்பிடல். நாம எல்லோரும் சமம் கோவாலு. வெளில நின்னு வேடிக்கை பாக்குறதில.


ramarajpd
மே 01, 2024 06:43

திரவுபதி முர்மூக்கு எதிராக யாரை ஆதரித்தார்கள் எதிர் கட்சிகள். அப்போ சொல்லி இருக்க வேண்டாமா, இப்போது ஏன் முதலைக் கண்ணீர்.


தாமரை மலர்கிறது
ஏப் 30, 2024 23:00

முப்பது கோடி தலித் மக்களின் ஒட்டு பிஜேபி க்கு மட்டும் தான்


Priyan Vadanad
ஏப் 30, 2024 22:30

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு இவர் அழைக்கப்பட்டு போயிருந்திருப்பாரேயானால் மிகவும் பெருமை மிக்கதாய் இருந்திருக்கும் அதை விட்டு இப்போது போவது BJPக்கு கான்வாஸ் செய்வதற்கு என்றுதான் நினைக்க தோன்றுகிறது உயரத்திலிருக்கும் ஒரு சாதாரண நபரால் பிஜேபி ஜெயித்தால் சரி


Sivak
ஏப் 30, 2024 23:11

//உயரத்தில் இருக்கும் சாதாரண நபர்// ஓடியாங்க ஓடியாங்க இங்க புலவர் வந்திருக்கிறார்


முருகன்
ஏப் 30, 2024 21:40

தேர்தல் நடக்க இருப்பதால் இந்த நாடகம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 30, 2024 21:14

சென்று வா மகளே சென்று வா ராமனை கண்டு வா மகளே கண்டு வா நாடு நலம் பெற, நன்மைகள் நிதம் பெற, இறைமை உடன் வர, வேண்டி வா மகளே, வேண்டி வா


சுராகோ
ஏப் 30, 2024 21:02

உங்களுக்கு எந்தமாதிரி அவர்கள் நடந்து கொண்டாலும் பிரச்சினையை ஆரம்பிச்சிடலாம்


Mario
ஏப் 30, 2024 20:35

Election time, they will do all


Ganesh
ஏப் 30, 2024 19:53

இந்த அம்மாவை சனாதனம் எப்படி டீல் செய்கிறது என்பதை பார்ப்போம்


திராவிட மாடல் மனித நேய மாடல்
ஏப் 30, 2024 19:08

ஹா எஹா வோட்டுக்கு என்னவேணுமளவும் சங்கிகள் லெவல் இறங்கி விடுவார்கள் அப்போ என்றது எல்லாம் பொய்யா GOPAL


N Sasikumar Yadhav
ஏப் 30, 2024 22:27

ஓய்வெடுக்க மாலத்தீவு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கின்றன தமிழக ஊடகங்கள் அவருக்கு ஓய்வு நிச்சயம் அவசியம்தான், அவர் ஓய்வெடுக்க வேண்டியதுதான் ஆனால் எத்தனையோ ஓய்விடங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்க சரியாக மாலத்தீவுக்கு செல்லும் அவசியம் என்ன? மாலத்தீவு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் நாடு, அது சீனாவின் உறவுக்காக நம்மை பகைத்து இப்போது இந்திய கடற்படை தளத்தை மூடியிருக்கின்றது அப்படிபட்ட மாலதீவின் முக்கிய வருமானமான அதன் சுற்றுலாவினை குறைக்க இந்தியர்கள் அதை புறக்கணிக்க தொடங்கினார்கள், மோடியே அதனை லட்சதீவில் செய்தார் இப்படி தேசம் மாலதீவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருக்கும் போது ஸ்டாலினார் அங்கு செல்வதெல்லாம் நல்ல தேசாபிமானம் அல்ல மோடிக்கும் அவருக்கும் அரசியல், கொள்கை முரண்பாடு இருக்கலாம் அரசியல் சர்ச்சை இருக்கலாம் ஆனால் அடிப்படையில் இந்தியர்கள் அப்படியான நிலையில் தேசம் முக்கியமில்லை மோடி எதிர்ப்புத்தான் முக்கியம், மோடிக்காக தேசத்தின் எதிர்சக்திகளை ஆதரிப்பேன் என்பது போல் ஸ்டாலினாரின் நடவடிக்கைகள் உள்ளன திமுகவின் வரலாற்றில் இது புதிதல்ல, தேசபக்தி பெரும்பாலும் அவர்களுக்கு இல்லை 1965ல் இந்தியா பாகிஸ்தான் போரில் இவர்கள் சென்னையில் இந்தி எதிர்ப்பு கலவரம் செய்தார்கள், வங்கபோர் நடந்தபோது ராமன் படத்தை அடித்த ராம்சாமிக்கு கைதட்டினார்கள் 1989ல் இந்திய ராணுவத்துடன் மோதிய அந்நிய பயங்கரவாதிகளை ஆதரித்தார்கள், என்னென்னவோ செய்தார்கள, கடைசியில் கொலைகாரன் வெளிவந்தபோது கட்டி தழுவவும் செய்தார்கள் இருமாதம் முன் குலசேகரபட்டின விண்வெளிமைய விளம்பரத்தில் சீன ராக்கெட்டை வைத்து சீனா நட்புநாடு என்றார்கள் இன்றும் பாகிஸ்தான் மாலத்தீவு என வரிந்துகட்டி எல்லையில் எப்போதும் போர்பதற்றம் வைத்திருக்கும் சீனாவ்னை, அருணாசலபிரதேசத்துக்கு உரிமைகோரும் சீனாவினை நட்புநாடு என்றார்கள் இப்போது சீனாவின் நண்பனும் இந்திய எதிரியுமான மாலதீவுக்கு கிளம்புகின்றார்கள் இதெல்லாம் எந்த தேசாபிமானியும் ஏற்றுகொள்ளும் விஷயம் அல்ல, உள்நாட்டு அரசியலுக்கு அந்நிய சக்திகளிடம் அடிபணிவது நல்லதல்ல ஸ்டாலினார் தானாக போகின்றாரா அல்லது ஏதும் அந்நிய சக்திகள் இழுத்து போகின்றதா என்பது தெரியவில்லை இதெல்லாம் செய்ய கூடாத விஷயங்கள், அரசியல் எனும் பெயரில் ஒருவித அகம்பாவமான விஷயங்கள் இந்திய ராணுவமும் பாதுகாப்பு உளவு அமைப்புக்களும் தேச மேலிடமும் இதை கண்காணிக்கும் எங்கு அடிக்கவேண்டுமோ அங்கு சரியாக அடிப்பார்கள் கனிமொழிக்கு சீன ராக்கெட், ஸ்டாலினாருக்கு மாலதீவு என யாரோ மிக தவறாக வழிகாட்டுகின்றார்கள், நிலமையின் வீரியம் புரியாமல் இவர்களும் சிக்குகின்றார்கள் எல்லாம் ஒருநாள் பெரிதாக விளைந்து நிற்கும், மோடி முன்பு திமுக பற்றி எச்சரித்ததும் நடக்கலாம் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்யமுடியா மிகபெரிய தவறை ஸ்டாலினார் செய்கின்றார், 1989களில் இலங்கையில் செய்த மிகபெரிய தவறில் அக்கட்சி தடைசெய்யபடும் வரை சென்றது காங்கிரஸை தன் சாதுர்யத்தால் அலல்து இருவருக்குமான பொது முதலாளியால் அதை தாண்டி இழுத்து சென்றார் கருணாநிதி இப்போது அதே பெரும் தவறை மாலதீவில் ஸ்டாலினார் செய்கின்றார் ஆனால் இப்போது கருணாநிதியாரும் அல்ல, காங்கிரசும் அல்ல இது அஜித்தோவால் மோடி காலம், இதன் விளைவுகள் சரியாக இராது, பின்னாளில் எதிர்பாரா நடிவடிக்கைகள் நிச்சயம் வரும் பிரம்ம ரிஷியார்


hari
மே 01, 2024 05:09

மாலத்தீவு போக பயந்துட்டான் கோவாலு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை