உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை பார்ட்டி விவகாரம் : நடிகை ஹேமா கைது

போதை பார்ட்டி விவகாரம் : நடிகை ஹேமா கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்ற போதை பார்ட்டி விவகாரத்தில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக தெலுங்கு நடிகை ஹேமாவை போலீசார் கைது செய்தனர்.பெங்களூருவில் கடந்த மே 20ம் தேதி போதை பார்ட்டி நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு போலீசார் நடத்திய சோதனையில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடத்தியது உறுதியானது. இதில் கலந்து கொண்ட தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், மாடல்கள் உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் தெலுங்கு நடிகை ஹேமா, நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஜானி ஆகியோரது பெயர்கள் அதில் அடிபட்டன. இதற்கு அவர்கள் மறுப்பு அறிக்கையை வெளியிட்டனர்.இந்நிலையில் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் உள்பட 73 ஆண்கள் மற்றும் 30 பெண்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதையடுத்து போதை பார்ட்டியில் கலந்து கொண்டதாக நடிகை ஹேமாவிற்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆஜராக நிலையில் இன்று நடிகை ஹேமாவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

UTHAMAN
ஜூன் 03, 2024 22:37

கமலாஹாசன் பார்ட்டியில் போதை பொருள் பரிமாறப்பட்டதே. இந்த தில் தமிழக ஏவல்துறைக்கு ஏது.


திராவிட போதை
ஜூன் 03, 2024 21:52

என்ன போ தங்கம். முன்னடியே கொஞ்சம் போleeசுக்கு ஷேர் அனுப்பி இருக்கலாம். பிரச்சினையே வந்திருக்காது...


Ramesh Sargam
ஜூன் 03, 2024 21:32

திரைத்துறையில் நடிப்பவர்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள், தொலைக்காட்சியில் சீரியல்களில் நடிப்பவர்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் பலபேருக்கு அந்த போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கம் இருக்கும். ஒரு ஹேமாவை கைதுசெய்வதால் எந்த பயனும் இல்லை.


Krishnamurthy Venkatesan
ஜூன் 03, 2024 20:44

பொதுமக்களின் நன்மைக்காக இவர்கள் அந்த இடத்தை விட்டு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்த ஒரு துன்பமும் நேராமல் மாற்று இடத்தில அரசு வீடு கட்டி கொடுக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரமாக கணிசமான தொகையை வங்கியில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டியின் பயனை அவர்கள் அடைய செய்ய வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ செலவுகளை அரசே ஏற்க வேண்டும். இதில் பொதுமக்களும் இவர்களுக்கு நிதி உதவி தாராளமாக செய்ய வேண்டும்.


Pandi Muni
ஜூன் 03, 2024 21:04

ஒரு நல்ல மன நல மருத்துவரை போய் நீ பார்க்க வேண்டும் அல்லது கருணாநிதி அடிச்சி வச்ச சொத்தில் ஒரு பகுதியை போதை கேஸுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை