உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளின் வெறியால்.. சுற்றுலா பயணிகளின் ‛சுடுகாடானது காஷ்மீர்

பயங்கரவாதிகளின் வெறியால்.. சுற்றுலா பயணிகளின் ‛சுடுகாடானது காஷ்மீர்

பசுமை போர்த்திய குளுமை மலை. கோடை சுற்றுலாவுக்கு வரவேற்பு பாடும் வாடைக்காற்று. பகல் வெப்பம் இல்லாத பஹல்காம்...பயங்கரவாதிகளால் பதற்றம் கொண்டது. படபடவென வெடித்தன துப்பாக்கிகள்.. சடசடவென மடிந்தன உயிர்கள்.புல்வெளி மூடிய பள்ளத்தாக்கிற்கு மனித ரத்தமே பாசன நீரானது. பாச உறவுகளின் கண்ணீர் கதறல், மலை முகடுகளில் எதிரொலித்தது.தன் குளிர்மடியில் குதூகலிக்க வந்த உயிர்களுக்கு மடியே மயானமான அதிர்ச்சியில் உறைந்தன மலைகள். உயிர்கள் பறிக்கப்பட்டதால் உதிர்ந்த உடல்கள், உறவுகளை உறக்கம் தொலைக்கவைத்து, கண்ணீரில் மிதக்க வைத்தன.

Galleryஆறுதல்படுத்த வார்த்தைகள் இல்லை.பயங்கரவாதம் என்றும் வென்றதில்லை.

தாக்குதல் நடந்த நாள்: ஏப்., 22, 2025


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை