உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் இ-சிகரெட் புகைக்கும் திரிணமுல் காங் எம்பி: பாஜ குற்றச்சாட்டால் பரபரப்பு

லோக்சபாவில் இ-சிகரெட் புகைக்கும் திரிணமுல் காங் எம்பி: பாஜ குற்றச்சாட்டால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டை திரிணமுல் காங்., எம்பி ஒருவர் புகைப்பதாக, பாஜ எம்பி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். இதற்கு, ''அத்தகைய அனுமதி இல்லை. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம், வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் குறித்து விவாதம் அனல் பறந்து வருகிறது. இன்றைக்கும் லோக்சபா 11 மணிக்கு கூடியது. விவாத நேரத்தின் போது பாஜ எம்பி அனுராக் தாக்கூர், ''வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டை திரிணமுல் காங்., எம்பி ஒருவர் புகைத்து வருகிறார். இந்த செயல்பாடு பார்லிமென்ட் ஒழுக்கத்தையும், தேசிய சட்டத்தையும் மீறுவதாகும்'' என குற்றம் சாட்டினார். இதனால் லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: சட்டசபை வளாகத்திற்குள் புகைப்பதற்கு அனுமதி ஏதும் வழங்கவில்லை. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன். நடத்தை விதிகள் அனைத்து எம்பிக்களுக்கும் ஒரே மாதிரி பொருந்தும். எந்தவொரு புகாரும் தீவிரமாக ஆராயப்படும். சபையின் கண்ணியத்தை எம்பிக்கள் பேண வேண்டும். அனைத்து எம்பிக்களும் அரசியலமைப்பு விதிகள் மற்றும் விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இது போன்று ஏதேனும் பிரச்னை குறித்து, எம்பிக்களிடம் இருந்து எனது கவனத்திற்கு வந்தால் நான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு ஓம்பிர்லா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

C.SRIRAM
டிச 11, 2025 22:32

எம் பிக்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்


Sun
டிச 11, 2025 20:44

நாடாளு மன்றத்தில் ஈ சிகரெட் புகைப்பார்கள், நாயைக் கொண்டு வருவார்கள்! யாரும் இவர்களை ஏன் என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது ! கேட்டால் மோடி அராஜகம் என்பார்கள், வெளிநடப்பு என்ற பெயரில் வெளியே ஓடி விடுவார்கள்! இவர்களது தலைவர் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் போதே வெளிநாடு கிளம்பி விடுவார்.


Rathna
டிச 11, 2025 16:34

தினமும் பாராளுமன்றம் உள்ளே கூச்சல். வெளியில் ஆர்பாட்டம். இதுதான் இவர்களின் ஜனநாயகம்.


ram
டிச 11, 2025 16:31

இது மட்டும்தான் இந்தியாவுக்குள்ளே பிரபலம் ஆகலே... அதையும் காங்கிரஸ் புண்ணியத்தாலே உள்ளே வந்தா சரி.. தமிழ்நாடு திமுக வாலே நாசமா போயிட்டிருக்கு... காங்கிரசாலே மொத்த இந்தியாவும் நாசமாக்க வழி கொண்டு வர்றாங்க போலே.. இந்த இசிகரெட் பயன்படுத்தினால் சிங்கப்பூரிலே 5 லட்சம் ரூபாய்க்கு மேல் அராதம்... ஏன்னா அந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்.. மது அறுந்தினால் கூட எந்த அபராதமும் இல்லை.. குறிப்பிட்ட இடத்தில் குடிப்பதை தவிர...


Arul. K
டிச 11, 2025 16:12

சிங்கப்பூரில் பொதுவெளியில் புகைக்கவே இது தடைசெய்யப்பட்டுள்ளது. சிகரட்டிற்கு இணையாக இதுவும் ஆபத்தானது


Barakat Ali
டிச 11, 2025 15:35

இ-சிகரெட் பயன்படுத்தியது யார் ????


Skywalker
டிச 11, 2025 15:29

Tommorow all opposition parties are going to protest against the fascist BJP government in parliament, for denying the right to smoke,


Suresh
டிச 11, 2025 14:21

இ-சிகரெட் என்றால் எலெக்ட்றானிக் சிகரெட் எனப்படும். ஐரோப்பாவில் இது மிகவும் பிரபலமாகும். மாறாக இந்தியாவில் அது அவ்வளவாக பிரபலம் இல்லை. பேட்டரியில் இயங்கும் சிறுடப்பாவில் சின்ன சிகரெட் வைக்கப்பட்டு இருக்கும். இதிலும் புகை வெளிவரும். பாராளுமன்ற கூட்டத்தில் இது பயன்படுத்தினால் விதிகளின் படி டிஸ்மிஸ் செய்யலாம்


Suresh
டிச 11, 2025 14:17

டிஸ்மிஸ் செய்வதை விடுத்து இப்படி தொடர்ந்து அட்ஜஸ்ட் செய்வதால் நாடு நாசமாகிறது


R Dhasarathan
டிச 11, 2025 16:14

எத்தனை பேரை எதற்கெல்லாம் டிஸ்மிஸ் செய்ய முடியும் சார், அவர்கள் எல்லோரும் சட்டத்தை மீறுபவர்கள் தான், நாம் தான் திருந்த வேண்டும் ஓட்டும்போது.....


சமீபத்திய செய்தி