உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 476 அரசியல் கட்சிகளை நீக்கும் தேர்தல் ஆணையம்: தமிழகத்தில் மட்டும் 42 கட்சிகள்

476 அரசியல் கட்சிகளை நீக்கும் தேர்தல் ஆணையம்: தமிழகத்தில் மட்டும் 42 கட்சிகள்

புதுடில்லி: 476 பதிவு செய்யப்பட்ட அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு இருக்க வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்ற தவறிய பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, 334 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் தற்போது பட்டியலில் உள்ள பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2854 என்பதில் இருந்து 2520 ஆக குறைந்துள்ளது.தற்போது 2வது கட்டமாக, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மேலும் 476 அரசியல் கட்சிகளை நீக்குவதற்காக அவை அடையாளம் காணப்பட்டு உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.மேலும், 30 மாநிலங்களில் நீக்கப்பட உள்ள பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் எத்தனை என்ற பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகள் எண்ணிக்கை 121 ஆகும்.அதற்கு அடுத்த இடத்தில் மஹாராஷ்டிரா (44) உள்ளது. 3வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இங்கு மொத்தம் 42 பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருக்கின்றன.4வது இடத்தில் டில்லி(41) 5வது இடத்தில் மத்திய பிரதேசம்(23) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. நாட்டிலேயே குறைந்த அளவாக அந்தமான், திரிபுரா மற்றும் சண்டிகரில் தலா ஒரேயொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி நீக்கப்படும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

PTSridharan
ஆக 12, 2025 05:09

வரவேற்கத்தக்க செயல்..... ஜனநாயகத்தில் புல்லுருவிகள்.....வேரறுக்குப்பட்டன. ஜாதிய அரசியலை அகற்றுவதற்கு ஒரு முன்னோடியாக அமைகிறது. தமிழ் வாழ்க வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்


தாமரை மலர்கிறது
ஆக 12, 2025 00:02

தமிழகத்தில் பிஜேபி, திமுக, அதிமுக இருந்தால் போதும். பிற கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது நல்லது. மக்களை குழப்பாது .


தாமரை மலர்கிறது
ஆக 12, 2025 00:02

தமிழகத்தில் பிஜேபி, திமுக, அதிமுக இருந்தால் போதும். பிற கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது நல்லது. மக்களை குழப்பாது .


Kumar Kumzi
ஆக 11, 2025 20:53

பச்சோந்தி தேமுதிக அம்புட்டு தானா


Kumar Kumzi
ஆக 11, 2025 20:50

அப்போ நம்பிள் ஆண்டவர் நிரந்தர திமுக அடிமையா ஹாஹாஹா


தமிழ்வேள்
ஆக 11, 2025 20:12

லிஸ்ட் கொடுக்கலாமே? எல்லோரும் தேர்தல் ஆணைய இணையப் பக்கத்தை பார்க்க போவதில்லையே? டுமீல் நாட்டில் எத்தனை லெட்டர் பேடு கும்பல்கள் இருந்தன என்றாவது தெரியுமே?


Ramesh Sargam
ஆக 11, 2025 19:49

அருமையான முடிவு. வடிவேலு பட காமெடி மாதிரி, எல்லா ஆணியும் புடுங்கப்படவேண்டியதுதான். தங்கள் சொந்த ஆதாயத்துக்காக கட்சி ஆரம்பிக்கும் கட்சிகள் அனைத்தும் நீக்கப்படவேண்டும்.


GMM
ஆக 11, 2025 19:13

போலி, பினாமி கட்சிகள் நீக்கம். இந்திய தேர்தல் சீர் திருத்த முதல் நடவடிக்கை. வரவேற்போம். வாக்காளர், வாக்கு பதிவு விகிதாசாரம் நிர்ணயிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஓட்டு போடுவதை தடுக்க விரும்பாது. சாதி, மத ஆதிக்க ஓட்டுகள் செயல் இழந்து விடும். அனைவரும் போட்டியிட வேண்டும். குறைந்த வாக்குகள் கட்டாயம் பெற வேண்டும். ஆதார் இணைப்பு உடன் பரிசீலனை செய்ய வேண்டும். வாக்காளர் பெயர், வயது, முகவரி குறைந்தது 3 அரசு அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.


K V Ramadoss
ஆக 11, 2025 19:03

476 பதிவு செய்யப்பட அங்கீகரிக்கப் படாத கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கப்படக் கூடாது என்று ராகுல் காந்தி ஆக்ஷேபம் தெரிவித்து மறியலில் ஈடுபடுவார். ஏதோவொரு காரணம் தேவை அவருக்கு.


உண்மை கசக்கும்
ஆக 11, 2025 19:00

நீக்கப்பட்ட 42 தமிழக கட்சிகளில் திருடர் கட்சிகளும் உண்டா..


சமீபத்திய செய்தி