| ADDED : ஜூலை 25, 2025 03:55 AM
புதுடில்லி: தொழிலதிபர் அனில் அம்பானியை மோசடியாளர் என எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்த நிலையில், 'எஸ் வங்கி' தொடர்பான பண மோசடி வழக்கில், அவருக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், 'ராகாஸ்' எனப்படும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார் . கடந்த 2017 - 19 வரையிலான காலக்கட்டத்தில், அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் நிறுவனங்களுக்கு, எஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. பெரிய அளவிலான, எவ்வித பாதுகாப்பற்ற கடன்களை எளிதாக்குவதற்காக, எஸ் வங்கியின் அதிகாரிகள், இயக்குநர்கள் என பல்வேறு தரப்பினருக்கு அனில் அம்பானி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், பெரிய அளவிலான முறைகேடு தொடர்ச்சி 7ம் பக்கம்