உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போபாலில் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுக்குப்பின் கழிவுகளை அழிக்க முயற்சி

போபாலில் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுக்குப்பின் கழிவுகளை அழிக்க முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால் : மத்திய பிரதேசத்தின் போபாலில் விஷவாயு கசிந்து பேரழிவை ஏற்படுத்திய சம்பவம் நடந்து, 40 ஆண்டுகளாகியுள்ள நிலையில், ஆலையில் உள்ள கழிவுகளை பாதுகாப்புடன் அழிக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன.மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள, 'யூனியன் கார்பைட்' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிச., 23ல், விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5,479 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, ஊனம் அடைந்தது, நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=grr5gwyw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மூடப்பட்டுள்ள இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தது. உடனடியாக அந்த கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில், இந்துாருக்கு அருகே உள்ள பீதாம்புரில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்தில், இந்தக் கழிவுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கழிவுகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக, பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆறுக்கும் மேற்பட்ட டிரக்குகள், போபால் ஆலைக்கு வந்துள்ளன. முழு கவச உடை அணிந்த போபால் மாநகராட்சி, சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் முன்னிலையில், கழிவுகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.இந்த கழிவுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது, சாலையில் போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிவுகள் அடங்கிய டிரக்குகள், போபாலில் இருந்து அடுத்த சில நாட்களுக்குள் புறப்படும் என, கூறப்படுகிறது.இந்துாருக்கு அருகில் உள்ள பீதாம்புரில் உள்ள கழிவுகள் மறுசுழற்சி மையத்தில், இந்த கழிவுகள் எரிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, 10,000 கிலோ கழிவுகளை எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளியாகும் வாயுக்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, நான்கு அடுக்கு பாதுகாப்பு பில்டர்கள் பொருத்தப்பட உள்ளன.அதன்பின், எரிக்கப்பட்ட கழிவுகளின் சாம்பல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதில் ஆபத்து ஏற்படக் கூடிய பொருட்கள் உள்ளதா என்று ஆராயப்படும். பல அடுக்கு பாதுகாப்புடன் கூடிய பைகளில் இந்த சாம்பல்கள் அடைக்கப்பட்டு, பூமியில் புதைக்கப்பட உள்ளன. அந்தப் பகுதியில், மண் மற்றும் நீர் ஆதாரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முதற்கட்ட கழிவுகள் எரிப்புக்குப் பின், மற்ற கழிவுகள் படிப்படியாக அழிக்கப்பட உள்ளன. அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் அனைத்து கழிவுகளும் எரிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பீதாம்புர் பகுதியில் கழிவுகளை எரிக்கவும், பூமியில் புதைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mohan
டிச 31, 2024 09:21

மக்களின் நலம் பாரா காங்கிரஸ் அரசாங்கம், போபால் விஷ வாயு சம்பவத்தில் மேல் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆண்டர்சன் எனும் யூனியன் கார்பைடு குழும தல்வரை அமெரிக்காவுக்கு தப்பித் செல்ல விட்டுவிட்டு, எல்லோருடனும் சேர்ந்து, "திருடன், திருடன்" என கூக்குரலிட்ட காங்கிரஸ் தலைமை எவ்வளவு மோசம் என அறியலாம். சரியான பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தாமல், சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மீது பழி சுமத்திய காங்கிரஸ் செயல்களை கண்டிக்காத நீதிமன்றங்கள். சுதந்திரம் வந்ததிலிருந்து எதை வேண்டுமானாலும் செய்து பிறகு தப்பிக்கும் முறையற்ற காங்கிரஸ் ஆட்சி மறுபடி இந்தியாவில் அமைந்தால்.. குடிமகன்களுக்கும், அமைதி மார்க்க மூர்க்கர்களுக்கு மட்டுமே பலன் அளிக்கும்.


Barakat Ali
டிச 31, 2024 08:42

குற்றவாளி ஆண்டர்சன் தப்பிக்க காங்கிரஸ் மேலிடம் உதவியது என்றால் மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜகவும் அலட்சியத்தால் தவறு செய்திருக்கிறது ....


Kasimani Baskaran
டிச 31, 2024 07:33

யூனியன் கார்பைடு நிறுவனத்தை வைத்து இதையெல்லாம் அன்றே சுத்தம் செய்திருக்க வேண்டும்.


புதிய வீடியோ