உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்ச நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் கமிஷன் பின்பற்றும்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் கமிஷன் பின்பற்றும்

புவனேஸ்வர்,''தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுவோம்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்துஉள்ளார்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று கூறியதாவது:அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் கமிஷன் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம். லோக்சபா தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

g.s,rajan
பிப் 18, 2024 07:32

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வரும் தேர்தலுக்குள் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்,இல்லை எனில் மீண்டும் பழையபடி வாக்குச் சீட்டு முறையையே பயன்படுத்தவேண்டும் ,கணிப்பொறித்துறை மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பம் அதிகம் வளர்ச்சி அடைந்த போதிலும் வளர்ந்த நாடுகளில் வாக்குச் சீட்டு முறையே இன்றும் பயன்படுத்தப் படுகிறது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்....


Priyan Vadanad
பிப் 18, 2024 01:17

தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருக்கும் வருவாயை எல்லா கட்சிகளும் வோட்டு விகிதாச்சாரத்துக்கு ஏற்றாற்போல பிரித்து எடுத்துக்கொள்ளலாமே.


Ramesh Sargam
பிப் 18, 2024 00:53

பின்பற்றியே ஆகவேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு சிக்கல்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி