உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பத்திரம்: எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை

தேர்தல் பத்திரம்: எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் பத்திரங்களின் கீழ் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.இந்த வகையில், தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றை வாங்கியவர்கள், அவற்றில் எவ்வளவு அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டன போன்ற விபரங்களை தாக்கல் செய்ய, இந்த திட்டத்தை செயல்படுத்தும் எஸ்.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3wcihf2w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவ்வாறு வங்கி அளிக்கும் தகவல்களை, தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிடப்பட்டது. இதன்படி, அனைத்து தகவல்களையும் தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., வழங்கியது.நேற்று இரவு இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிட்டது. இரண்டு தொகுப்புகளாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 337 பக்கங்கள் உள்ள முதல் தொகுப்பில், பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம், 426 பக்கங்கள் உள்ள இரண்டாவது தொகுப்பில், எந்தெந்த கட்சிகள், அந்தப் பத்திரங்களை பணமாக்கியுள்ளன என்ற விபரம், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. தேதி வாரியாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனம் மொத்தம் எவ்வளவு வழங்கியுள்ளது, அது எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது போன்ற விபரங்கள் இல்லை. அதுபோல, அரசியல் கட்சிகள் மொத்தமாக பெற்றுள்ள நன்கொடை தொடர்பான விபரமும் தொகுக்கப்படவில்லை.

நன்கொடை அளித்த நிறுவனங்கள்

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை வழங்கிய நாட்டின் முன்னணி நிறுவனங்கள்: பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் - 1,368 கோடி ரூபாய் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் -- 966 கோடி ரூபாய், குயிக் சப்ளை செயின் நிறுவனம் - 410 கோடி ரூபாய், வேதாந்தா நிறுவனம் - 400 கோடி ரூபாய், ஹால்தியா எனர்ஜி - 377 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. பார்த்தி குழுமம் - 247 கோடி ரூபாய், எஸ்ஸல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் - 224 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. பியூச்சர் கேமிங் நிறுவனம் லாட்டரி மார்ட்டினுடையது என கூறப்படுகிறது.

நன்கொடை பெற்ற கட்சிகள்

பா.ஜ., காங்கிரஸ், அ.தி.மு.க., - - தி.மு.க., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணமுல் காங்., - பி.ஆர்.எஸ்., சிவசேனா, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த பட்டியலில் உள்ளன. இதற்கிடையே, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில், 2024 ஜனவரி வரை, மொத்தம், 16,518 கோடி ரூபாய் மதிப்புள்ள, 28,030 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில்,பா.ஜ., 6,566 கோடி ரூபாயும்,காங்கிரஸ் 1,123 கோடி ரூபாயும்,திரிணமுல் காங்கிரஸ் 1,092 கோடி ரூபாயும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற்றுள்ளதாக ஏ.டி.ஆர்., அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Rengaraj
மார் 16, 2024 13:57

தேர்தல் பத்திரமா வாங்கி கொடுத்தா அது தப்பு செல்லாது அப்படின்னு உச்ச நீதிமன்றம் சொல்லுது. பணமா கொடுத்தா அது தப்பில்லைன்னு சொல்லவருதா என்று தீர்ப்பின் மூலம் புரிந்துகொள்ளமுடியவில்லை. தீர்ப்பு குழப்பாமல் தெளிவா இருக்க வேண்டாமா ? யாரிடமிருந்து தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் நன்கொடை பெற்றன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் உச்ச நீதிமன்றம் , ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் கமிஷனில் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யும் அரசியல் கட்சிகள் தாங்கள் நன்கொடையாக யார் யாரிடம் இருந்து எவ்வளவு பெற்றன என்ற விவரத்தை தேர்தல் கமிஷனுக்கு தரவேண்டும் என்று ஏன் சொல்லவில்லை? அந்த விவரத்தை தங்களது இணையதளத்தில் மக்களுக்கு தெரியும்வண்ணம் பதிவேற்றவேண்டும் என்றும் ஏன் சொல்லவில்லை? வெளிப்படை தன்மை வேண்டும் என்று ஆசைப்படும் உச்சநீதிமன்றம் மக்கள் பிரநிதித்துவசட்டத்தில் , தேர்தல் நடைமுறைகளில் , அரசியல் கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையில் இதை கட்டாயமாக்கவேண்டும் என்று ஏன் சொல்லவில்லை ? அமெரிக்காவில் கட்சிகளுக்கு நன்கொடை தந்தவரும் நன்கொடை பெற்ற கட்சிகளும் இதை வெளிப்படையாக அறிவிக்கின்றன. அங்குள்ள எலெக்சன் கமிஷன் இணையத்தளத்தில் (s://www.fec.gov/) நன்கொடை விவரத்தை யாரும் பார்க்கமுடியும். அதேபோன்று இங்கே கொண்டுவருவதற்கு என்ன தயக்கம் ? இதை ஏன் வெளிப்படைத்தன்மையுடன் உச்சநீதிமன்றம் அறிவிக்கக்கூடாது ? அங்கு எல்லோரும் எல்லாக்கட்சிகளுக்கும் நன்கொடை தருகிறார்கள். நன்கொடை தருவதால் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்துவிட்டது


PRAKASH.P
மார் 16, 2024 00:24

Mega scam


Madhu
மார் 15, 2024 22:16

வெளியாகியுள்ள விவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கோடிக் கணக்கில் வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவே நிதியுதவியை கார்ப்பரேட்டுகளிடமிருந்தும், வர்த்தக நிறுவனங்களைடமிருந்தும் பெற்றுள்ளன. இவர்கள்தான் மக்களவயில் குடிமகன்களின் வருமானத்துக்கு வரி விதிக்க சட்டம் இயற்றுகிறார்கள். நாளைக்கே சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் பெற்றுள்ள நிதி உட்பட அனைத்திற்கும் வருமான வரி சட்டத்தின்படி வரி கட்ட வேண்டும் என ஒரு தனி நபர் மசோதா கொண்டு வந்தால் அதனை எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து கொண்டு எதிர்த்து தோல்வியடையச் செய்து விடுவார்கள். இதுதான் நம் நாட்டின் பரிதாப நிலைமை.


Sathyasekaren Sathyanarayanana
மார் 15, 2024 21:01

இங்கே, மற்றும் முகநூல் பக்கங்களில் வெறும் இருநூறு ரூபாய் கொத்தடிமைகள் தான் கருத்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், திருட்டு திராவிட அரசியல் வியாதிகள், வாயை மூடி அமைதியாக இருக்கிறார்கள்.


தமிழ்
மார் 16, 2024 12:29

இதுல நீ எந்த லிஸ்ட்.


sankaranarayanan
மார் 15, 2024 20:59

இந்த லிஸ்டில் சன் டிவி குழுமம் எவ்வளவு திராவிட கட்சிகளுக்கு கொடுத்திருக்கிறது என்ற விவரம் தெரிந்தால் நல்லது


vbs manian
மார் 15, 2024 20:02

அதானி அம்பானி பெயர்கள் இல்லை. லாட்டரி சீட்டு மன்னர் பெயர் உள்ளது. பங்குகளில் பணம் போடும் வாடிக்கையாளருக்கு எந்த பாதுகாப்பும் ரகசிய உத்திரவாதமும் இல்லை என்று தெரிகிறது. பங்குகள் தங்கள் சுதந்திரத்தை இழந்து விட்டனவா.


Rajkumar
மார் 15, 2024 19:50

திராவிடத்திற்கு என்ன ஆபத்து ...அதானி அம்பானி எதற்கு வாங்க வேண்டும்..முழுவதுமாக வெளியிட மாட்டார்கள்..முடிந்தவரை கடைசி வரை குழப்பம் தான் செய்வார்கள்..ஓரிரு நாளில் மக்கள் மறக்கடிக்கப் படுவார்கள்..


J.Isaac
மார் 15, 2024 17:55

அதானி, அம்பானி தேர்தல் பத்திரமே வாங்கவில்லையா ? பட்டியலில் எதோ குழப்பம்.


sankar
மார் 15, 2024 19:47

போயி கேச போடுங்க


R GANAPATHI SUBRAMANIAN
மார் 15, 2024 17:15

போற போக்க பார்த்தல், திராவிடத்திற்கு பெரிய சிக்கல் காத்திருக்கு போலிருக்கு.


கனோஜ் ஆங்ரே
மார் 15, 2024 19:25

திராவிடத்துக்கு இல்ல சுப்பிரமணியம்.... உங்களுக்குத்தான். குரு பெயர்ச்சி சரியில்ல...?


Bala
மார் 15, 2024 20:59

கணபதி சார் இதுக்கு பேர்தான் சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது என்பது. ஒரே ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்யும்போதே 600 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரம் நன்கொடையாக வாங்கியுள்ளது விடியல் கட்சி


கனோஜ் ஆங்ரே
மார் 16, 2024 11:31

... திருடென்ல ஏது சின்ன திருடன், பெரிய திருடன்...? எல்லாருமே திருடெங்கதான்.... பத்து ரூபா திருடுனா தப்பு... பத்தாயிரம் கோடி திருடுனா தப்பில்லையா....?


Rajathi Rajan
மார் 15, 2024 16:55

martin magan bjp member athu theriyuma. E.D. raidu ponathuku பலன்தான் இந்த பத்திரம்....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை