உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 370வது சட்டப்பிரிவு திரும்பாது; பயங்கரவாதிகள் அழித்த கோயிலை கட்டுவோம்: காஷ்மீரில் அமித்ஷா உறுதி

370வது சட்டப்பிரிவு திரும்பாது; பயங்கரவாதிகள் அழித்த கோயிலை கட்டுவோம்: காஷ்மீரில் அமித்ஷா உறுதி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‛‛ மாநிலத்தில் பயங்கரவாதிகள் அழித்த கோயிலை மீண்டும் கட்டுவோம். மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவு திரும்பாது '' எனக்கூறினார்.90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=423w2h4q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமித்ஷா கூறியதாவது: *தேசியவாத காங்கிரசின் அஜெண்டாவை காங்கிரஸ் மறைமுகமாக ஆதரிக்கிறது.*காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவு என்பது வரலாறு. அது மீண்டும் திரும்பாது. அதனை நடக்க விட மாட்டோம். இச்சட்டம் இளைஞர்களின் கைகளில் ஆயுதத்தையும் மற்றும் கற்களையும் கொடுத்தது.*ஆண்டு தோறும், குடும்பத்தில் உள்ள முதிய பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.உஜ்வாலா திட்டத்தின் கீழ் இரண்டு சிலிண்டர் வழங்கப்படும்.*மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். *தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், குஜ்ஜார்களுக்கான இட ஒதுக்கீட்டில் கையை வைக்க அனுமதிக்க மாட்டோம். *கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீரின் 10 ஆண்டுகால பொற்கால சகாப்தத்தில் அமைதி, வளர்ச்சி ஆகியவை உறுதி செய்யப்பட்டு உள்ளது.*காஷ்மீரில் பயங்கரவாதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.*பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுவதை உறுதி செய்யப்படும். *இந்த பிராந்தியத்தில் 5 ஆண்டு காலத்தில் வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்வோம். *3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.*மாநிலத்தில் பயங்கரவாதிகள் அழித்த கோயிலை மீண்டும் கட்டுவோம்.*மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் மாநில மக்களுக்கு கிடைக்க செய்வோம்.*சுற்றுலாவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Pattabiraman
செப் 07, 2024 20:18

தமிழ் நாட்டில் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்கள் அமிர்தா அவர்களுக்கு தெரியாதா


T.sthivinayagam
செப் 06, 2024 20:25

கடவுளைக்கு அர்ச்சனை ஆராதனை செய்ய ஹிந்துவை சில ஹிந்துக்கள் தடுக்கின்றனர் முதலில் இங்கு உள்ள ஹிந்துக்கு நன்மை செய்யுங்கள் என்று ஆன்மீக அரசியல் சார்ந்தவரகள் கூறுகின்றார்


Sivagiri
செப் 06, 2024 19:44

விரட்டப்பட்ட ஹிந்துக்களை மீண்டும் கொண்டு சென்று அங்கே வாழ vaikka முடியுமா ? , அவர்கள் இழந்த , வீடு ,நிலம் தோட்டம் , தொழிற்சாலை , அவற்றை திரும்ப ஒப்படைக்க செய்ய முடியுமா ? , கற்பழிக்கப்பட்ட , கொலை செய்யப்பட்ட , மக்களுக்கு நியாயம் கிடைக்குமா ? தண்டனை கிடைக்க செய்ய முடியுமா ?


mei
செப் 06, 2024 18:30

இந்தியாவை ஆக்கிரமித்து, இந்து கோவில்களை அழித்து அமைத்த அந்நிய மத வழிபாட்டிடங்கள் அனைத்தையும் அழித்து, இந்து கோவில்களை மறுபடியும் கட்டவேண்டும்


Rajah
செப் 06, 2024 17:49

பிரிட்டிஷ் ஆட்ச்சியில் நடந்த கொடூரங்களை எழுதினால் அதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவை. அதை எதிர்க்க மாட்டார்கள். ஆனால் மொகலாயர்கள் நடத்திய கொடூரங்களை எழுதினால் அது சமூகநீதிக்கு எதிரானவை. அதற்காக போராட்டங்கள் நடத்துவார்கள். விஜயின் கட்சியில்கூட சனாதனம் இருக்கிறது என்று புலம்பிய கூட்டம் இருக்கும்வரை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். திராவிடர்கள் கைப்பற்றிய தமிழத்தை மீண்டும் நாம் கைப்பற்ற வேண்டும்.


Senthil
செப் 07, 2024 23:00

இந்தியாவுக்கான வரலாறை எழுதியதே வெள்ளைக்காரர்கள்தானே இன்றைய Gulf மாதிரி பல்வேறு நாடுகளாக இருந்த இன்றைய இந்திய பகுதியை வெள்ளைக்கார கம்மனாட்டிங்க தங்கள் வசதிக்காக ஒருங்கிணைத்து அதற்கு இந்தியா என பெயரும் சூட்டி இன்று தமிழர்கள் ஹிந்திக்கார பயலுகளிடம் சிக்கித் தவிக்க காரணமாகிவிட்டார்கள். அதையும் சரி செய்தால் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை