உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரட்டை இன்ஜின் அரசின் வெற்று வாக்குறுதிகள்: ராகுல் குற்றச்சாட்டு

இரட்டை இன்ஜின் அரசின் வெற்று வாக்குறுதிகள்: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாருக்கு அறிவிக்கப்பட்ட 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் எங்கே என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், மாநிலத்தில் இரட்டை இன்ஜின் அரசு அளித்தது அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் எனத் தெரிவித்துள்ளார்.பீஹாரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக்., 1 முதல் நவ.,30 வரை 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்து இருந்தது. தினமும் சராசரியாக 196 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவித்து இருந்தது. இதில் குறைந்தபட்சமாக அக்., 8 ல் 166 ரயில்களும், அதிகபட்சமாக அக்.,18 ல் 280 ரயில்களும் இயக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளதாவது: இது தீபாவளி, சாத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின் மாதம். பீஹாரில் இந்த பண்டிகை என்பது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல. வீடு திரும்புவதற்கான ஏக்கத்தையும், மண்ணின் வாசனையையும், குடும்பத்தின் மீதான அன்பையும், கிராமத்தின் வாழ்க்கையின் மீதான அரவணைப்பையும் குறிக்கிறது.ஆனால் இந்த ஏக்கம் இப்போது ஒரு போராட்டமாக மாறிவிட்டது.பீஹாருக்கான ரயில்கள் போதுமான அளவு நிரம்பியுள்ளன. டிக்கெட்டுகள் எளிதில் கிடைப்பதில்லை. பயணம் மனிதாபிமானம் அற்றதாகிவிட்டது. பல ரயில்களில் அளவுக்கு அதிகமாக 200% வரை மக்கள் பயணிக்கின்றனர். மக்கள் கதவுகளிலும், கூரைகளிலும் தொங்கிக் கொண்டு பயணிக்கின்றனர். இரட்டை இன்ஜின் அரசின் அளித்தது அனைத்தும் வெற்று வாக்குறுதி என்பதை நிரூபிக்கின்றன.12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் எங்கே?ஒவ்வொரு ஆண்டும் சூழ்நிலை மோசமாவது ஏன்?ஒவ்வொரு ஆண்டும் பீஹார் மக்கள் ஏன் இத்தகைய அவமானகரமான சூழ்நிலையில் பயணிக்க வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு மாநிலத்தில் வேலைவாய்ப்பும், மரியாதையான வாழ்க்கையும் இருந்திருந்தால், அவர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியதில்லை. இவர்கள் உதவியற்ற பயணிகள் மட்டுமல்ல, தேஜ கூட்டணியின் வஞ்சகக் கொள்கைகள், நோக்கங்களுக்கு வாழும் சான்றாகும். பாதுகாப்பான, மரியாதைக்குரிய பயணம் என்பது சலுகை அல்ல. அது ஒரு உரிமை இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Bhakt
அக் 26, 2025 00:21

சூடு சுரணை அற்ற ஐரோப்பா புத்ர்


பாரத புதல்வன்
அக் 25, 2025 21:02

பப்புவுக்கு பாக்கிஸ்தான் குடியுரிமை உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.


V Venkatachalam, Chennai-87
அக் 25, 2025 20:23

இவர் பேச்சை யார் கேக்குறாங்க ? போன எலக்ஷனுக்கு அயோத்தியில் ஏடிஎம் கார்டு அடிச்சி வாக்காளர்கள் கையில் குடுத்த மாதிரி இப்பவும் குடுக்க முடியலையா? அத பண்ணினா இந்த மாதிரி புலம்ப வேண்டாமே.


கோட்டையன்
அக் 25, 2025 20:12

ஆமாம்! தாய்லாந்துல ஒரு புது படம் ரிலீஸ் ஆயிருக்காமே? பாக்கப் போகல! ரொம்ப நாளா இந்தியாவுலலேயே தங்கிட்டீங்க போல?


ஆரூர் ரங்
அக் 25, 2025 19:48

உங்கள் ஆட்சியில் எத்தனை ரயில்வே பாதைகள் மின்மயமாக்கபட்டிருந்தன?. இப்போ எவ்வளவு தெரியுமா?. மெட்ரோ பாதைகளின் எண்ணிக்கை எத்தனை மடங்காகியுள்ளது தெரியுமா


திகழ்ஓவியன்
அக் 25, 2025 21:11

அய்யா இந்த பப்பு தான் உங்க 400 பார் கனவை சிதைச்சி MINORITY GOVT நிலைக்கு கொண்டுவந்தவர் இன்னும் திருட்டு ஒட்டு இல்லை என்றால் இவர் தான் பிரதமர் ஆகி இருக்க வேண்டியது


vivek
அக் 26, 2025 04:39

திகழ்... நீ எவளோ கதறினாலும் எவனும் மதிக்க போவதிலை...உனக்கு அதே அலுமினிய தட்டு தான்


Subburamu K
அக் 25, 2025 19:37

Voters must realise who are the looters of the public wealth and who are all working for the society. Those who are in bail and sought apologies in courts cannot deliver good to the peoples


பேசும் தமிழன்
அக் 25, 2025 19:05

தீபாவளி.... சத் பூஜை எல்லாம் இந்த இத்தாலி பப்பு வுக்கு இப்போது தான் நியாபகம் வருது போல் தெரிகிறது...... பப்பு உன் பெயருக்கு பின்னால் போலியாக வைத்திருக்கும் காந்தி உட்பட அத்தனையும் போலி என்பது மக்களுக்குத் தெரிந்து விட்டது.... அதனால் உன் பொய் புறட்டை இங்கே யாரும் நம்ப தயாராக இல்லை.... நீ வேண்டுமானால் உன் அபிமான பாகிஸ்தான் அல்லது இத்தாலியில் நாட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்....அங்கே உனக்கு வளமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது.... ஆனால் இங்கே.... வாய்பில்லை ராஜா.... வாய்ப்பே இல்லை.


Rajkumar Ramamoorthy
அக் 25, 2025 19:00

கரெக்ட்


சூர்யா
அக் 25, 2025 18:40

எது இரட்டை என்ஜின் ? பெயரளவிற்கு கார்கேவிற்கு தலைமைப் பதவியை கொடுத்து விட்டு கட்சியை முழுவதுமாக உங்கள் குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறதே? அதுதான் இரட்டை என்ஜின்!


sankar
அக் 25, 2025 18:25

களவாணிகள் கூட்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை