உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 8-வது சம்மன்

முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 8-வது சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு, நில அபகரிப்பு வழக்குகளில் ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன், 48, உள்ளார். இம்மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் அத்துடன், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்கப்பட்ட நிலங்கள் முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்நிலையில் இவர் மீதான வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே ஏழு முறை அமலாக்க துறை சம்மன் அனுப்பியது. இதுவரை ஹேமந்த் சோரன் ஆஜராகாத நிலையில் எட்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பி, வரும் ஜன.16 முதல் 20-ம் தேதிக்குள் ஆஜராகி வாக்குமூலம் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sathyam
ஜன 16, 2024 19:01

சிஐஏ/கலிஸ்தானி/எம்ஐ6 என்ற ஆழமான அரசு நிறுவனமோ அல்லது வெளிநாட்டில் உள்ள ஒருவருடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டவர்களோ இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். ஏஜென்சிகள் மற்றும் சில பிஜேபி அரசியல்வாதிகள் இந்த துரோகியை பாதுகாக்கிறார்கள் மற்றும் கைது செய்ய முடியவில்லை. என்று அமித் ஷா உணர்கிறேன் ஆழமாக மூழ்கி, இரக்கமற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும், மேலும் இந்த தீய கெஜ்ருதீன் சிறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் இறுக்கமான வழக்கை உருவாக்குங்கள், இல்லையெனில் டெல்லியின் வெட்கமற்ற குடிமக்கள் இதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது அவமானம் மற்றும் சாபம் மாரிச்சா/கால்நேமி


sankar
ஜன 16, 2024 17:20

சம்மன் கொடுப்பது வேஸ்ட்


DVRR
ஜன 16, 2024 16:51

சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் இல்லையா????அங்கே சொறிவால் இங்கே ஹேமந்த் இருவரும் முதல்வர்கள் ???சட்டத்தை இவர்கள் மதிக்கமாட்டார்களாம் ஆனால் நாம் மட்டும் இவர்களை மதிக்கணுமாம் ???இவர்கள் தவறு செய்யவில்லையென்றால் நீதிமன்றம் சென்று அதை நிரூபிப்பது தானே முறை???


தஞ்சை மன்னர்
ஜன 16, 2024 12:20

அரவிந்த் கெஜ்ரிவால் : இது எனக்கு 4 வது, உனக்கு ஹேமந்த் சோரன்: இது எனக்கு எட்டாவது அப்பட அவரு நம்மளவிட 4 லீடிங்கில் இருக்கார்


Indian
ஜன 16, 2024 11:07

பாஜாகாவிற்கு ஆதரவலத்தால் புனிதர்கள் எதிர்த்தால் திருடர்கள் மக்கள் எப்போதும் இளிச்சவாயிகள் என்று நினைத்து விடாதீர்கள் சேர்ந்து அடித்தால் மறுபடியும் எந்திரிக்க மாட்டீர்கள்


Ramesh
ஜன 16, 2024 10:42

A game seems to be underway between Mr. Kejriwal and Mr. Hamant Chor, competing to see who can evade Enforcement Directorate notifications more frequently.


VENKATASUBRAMANIAN
ஜன 16, 2024 08:49

கைது செய்தால் அனுதாபம் தேடலாம் என்று நினைக்கிறார். ஆனால் நீதிமன்றம் மூலம் கைதானால் கதை கந்தல் ஆகிவிடும்


sankaranarayanan
ஜன 16, 2024 00:50

இவருக்கும் கஜினி முஹமத்திற்கும் வித்தியாசமே இல்லை இனி ஒன்பதாவது முறை அமலாக்கத்துறை இவரை வெளியே வரமுடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுவிடுவார்கள்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 15, 2024 23:53

இந்த திருடர்களுக்கு வோட்டை போடும் மக்களை தான் குறை சொல்லவேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ